Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலைமுடி உதிர்வை போக்கி நன்கு வளர உதவும் செம்பருத்தி எண்ணெய்!!

Webdunia
செம்பருத்தி பலவகை மருத்துவ தன்மைகளை கொண்டது. அதிக குளிர்ச்சி தன்மையுடையது. மேலும் செம்பருத்தி எண்ணெய் தலைமுடி உதிர்வுக்கு, பொடுகு தொல்லைக்கு, முடி உதிர்ந்த இடத்தில் மீண்டும் முடி வளர, கூந்தல் அடர்த்தியாக வளர, கூந்தல் ஆரோக்கியத்திற்கு  என்று பலவகையான கூந்தல் பிரச்சனைகளுக்கு செம்பருத்தி எண்ணெய் நல்ல தீர்வினை வழங்குகிறது. 
செம்பருத்தி எண்ணெய் தயாரிக்க:
 
செம்பருத்தி பூ - 10
செம்பருத்தி இலை - 10
தேங்காய் எண்ணெய் - 1/2 லிட்டர்
வேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு
கருவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு
செய்முறை:
 
இந்த செம்பருத்தி எண்ணெய் செய்வதற்கு 10 சிவப்பு செம்பருத்தி பூக்களும், 10 செம்பருத்தி இலைகளும் தேவை. அவற்றை பொடிதாக நறுக்கி,  மிக்சியில் சேர்த்து நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
 
பின்பு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து கொள்ளவும். அவற்றில் 1/2 லிட்டர் தேங்காய் எண்ணெயை ஊற்றி, சூடேற்றவும், எண்ணெய்  சூடேறியதும், அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, அரைத்த கலவையை எண்ணெயில் சேர்க்க வேண்டும். பின்பு அதனுடன் சிறிதளவு  வேப்பிலையை மற்றும் வேப்பிலை சேர்க்கவேண்டும். இவை பொடுகு பிரச்சனையை சரிசெய்ய பெரிதும் உதவுகிறது.
 
செம்பருத்தி, கறிவேப்பிலை, வேப்பிலை போன்றவை நன்றாக எண்ணெய்யில் சேர்ந்ததும், அடுப்பை அணைத்து விடவேண்டும். பின்பு இந்த  செம்பருத்தி எண்ணெய்யை நன்றாக ஆற வைத்து, வடிகட்டி பாட்டிலில் ஊற்றி பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். இவற்றை அன்றாடம்  பயன்படுத்தி வந்தால் தலை முடி உதிர்வை போக்கி, நன்கு வளர உதவும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுபானத்திற்கும் மறதிக்கும் தொடர்பு உண்டா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

உப்பு உங்கள் உடலில் என்ன செய்யும்? ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு எடுக்கலாம்?

வெந்தயம், கருஞ்சீரகம் சர்க்கரையை கட்டுப்படுத்தும் என்பது உண்மையா?

அதிக நேரம் கணினியை பார்ப்பவர்கள் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்..!

வேர்க்கடலை சாப்பிடுவதால் என்ன நன்மைகள்?

அடுத்த கட்டுரையில்
Show comments