Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குழந்தைகளுக்கு சொல்லித்தரவேண்டிய சில உடற்பயிற்சிகள்!!

குழந்தைகளுக்கு சொல்லித்தரவேண்டிய சில உடற்பயிற்சிகள்!!
குழந்தைகளை ஓடவிட்டு, கூடவே நாமும் ஓடலாம். இதனால் குழந்தைகளுக்குப் பெற்றோரின் மீதான நெருக்கம் அதிகரிக்கும். உடல் சோர்வும்  நீங்கும்.
குழந்தைகளுக்கு எளிய உடற்பயிற்சிகளை சொல்லித் தரலாம். உடல் ஆரோக்கியமாக இருக்கும். மூளை நன்கு சுறுசுறுப்படையும், எப்போதும் உடல் நன்கு ஆரோக்கியமாக இருக்கும். 
 
நீச்சல் டென்னிஸ், கிரிக்கெட், கூடைப்பந்து போன்ற விளையாட்டுகளில் பயிற்சி கொடுக்கலாம். உயரம் குறைவாக இருந்தால் அவர்களுக்குக் கூடைப்பந்துப் பயிற்சி கொடுப்பதால் பலன் தரும்.
webdunia
குழந்தைகள் நன்றாக ஓடி ஆடி விளையாடினாலே, அது ஒருவகையில் பயிற்சிதான். தினமும் கட்டாயம் உடல் வலுவை மேம்படுத்த சில  பயிற்சிகளைச் செய்யவேண்டும்.
 
குழந்தைகளை அருகில் உள்ள பூங்காவிற்கு சென்று விளையாட சொல்லலாம். படிகளில் ஏறி இறங்கலாம். ரத்த ஓட்டம் சீராகும். மேலும் ஓடிபிடித்து விளையாடுவது, சைக்கிள் ஓட்டுவது இது போன்ற செயல்களில் ஈடுபடலாம்.
 
காலையில் ஸ்கிப்பிங் விளையாடச் சொல்லலாம். மனம் ஒருநிலைப்படும். வியர்வை வெளியேறி, புத்துணர்ச்சி கிடைக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சரும வியாதிகளை நீக்கும் அற்புத மூலிகைகள்!!