Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜவ்வரிசி போண்டா செய்ய...!!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
ஜவ்வரிசி - ஒரு கப்
உருளைக் கிழங்கு - 2
கேரட், கோஸ் - தலா கைப்பிடி (நறுக்கியது)
புதினா, கொத்தமல்லி - தேவையான அளவு
இஞ்சி - சிறிய துண்டு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை:
 
உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி மசித்து கொள்ளவும். கேரட், கோஸை துருவிக்கொள்ளவும். இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஜவ்வரிசியை ஐந்து மணிநேரம் வரை ஊறவைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் ஊறிய ஜவ்வரிசியை போட்டு அதனுடன் மசித்த உருளைக் கிழங்கு, பச்சை மிளகாய், காய்கறித் துருவல், உப்பு, புதினா, கொத்தமல்லி, இஞ்சி ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.
 
இந்த கலவையைச் சிறு சிறு உருணடைகளாகப் பிடித்து வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பிடித்து வைத்துள்ள உருண்டைகளை போட்டு பொரித்தெடுத்து பரிமாறவும். சுவையான ஜவ்வரிசி போண்டா தயார்.

தொடர்புடைய செய்திகள்

வெந்தய பொடியை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

உடலுக்கு நன்மை தரும் சுவையான ராகி பாயாசம் செய்வது எப்படி?

தினமும் ஊற வைத்த பாதாம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

கேழ்வரகு உணவுகளில் இருக்கும் சத்துக்கள் என்னென்ன?

சிகரெட் புகைப்பதால் ஏற்படும் அதிர்ச்சியூட்டும் தீமைகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments