மூளை வளர்ச்சிக்கு உதவும் உணவுகள்: நினைவாற்றல் மற்றும் கவனம் அதிகரிக்க வழிகள்

Mahendran
செவ்வாய், 23 செப்டம்பர் 2025 (19:00 IST)
பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் பெற, வெறும் படிப்பு மட்டும் போதாது. அவர்களின் மூளை வளர்ச்சிக்கு உதவும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளும் அவசியம். உணவு உடலுக்கு மட்டுமல்ல, மூளைக்கும் ஊட்டமளித்து அதன் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது.
 
மூளை வளர்ச்சியை மேம்படுத்தும் உணவுகள்
 
மீன்: கர்ப்ப காலத்தில் மீன் அதிகம் சாப்பிடும் தாய்மார்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் அதிக புத்திசாலித்தனமாக இருப்பார்கள். 
 
பால் மற்றும் பால் பொருட்கள்: பால், தயிர் போன்ற பால் பொருட்களில் புரதம், கால்சியம், பொட்டாசியம், மற்றும் வைட்டமின் D போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை நரம்பு மண்டலத்தைச் சீராக இயக்கி, மூளை செல்களை சுறுசுறுப்பாகச் செயல்பட வைக்கின்றன. 
 
முட்டை: முட்டையில் மூளையின் நினைவாற்றலை அதிகரிக்கும் கோலைன் சத்து அதிகமாக உள்ளது.
 
காய்கறிகள்: பசலைக்கீரை, ப்ராக்கோலி, காலிஃபிளவர், தக்காளி, கேரட், பீன்ஸ் போன்ற காய்கறிகளில் நினைவாற்றலை அதிகரிக்கும் பொருட்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுச்சத்துக்கள் நிறைந்துள்ளன. 
 
தேன்: தேன் நினைவாற்றலை அதிகரிக்க உதவும். தினமும் ஒரு ஸ்பூன் தேன் சாப்பிடுவதால் நினைவாற்றல் அதிகரிக்கவும் உதவும்.
 
மேற்கூறிய உணவுகளைக் குழந்தைகளுக்குத் தொடர்ந்து கொடுப்பதன் மூலம், அவர்களின் மூளை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கும்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பழைய சோறு காலையில் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

முகத்துக்கு பாடி லோஷன் கூடாது: நிபுணரின் அவசர எச்சரிக்கை!

கண்களைப் பாதுகாக்க தினமும் செய்ய வேண்டிய அத்தியாவசியப் பழக்கங்கள்!

செரிமான மண்டலத்தில் பாதிப்பு ஏற்பட்டால் மனநலமும் பாதிக்குமா?

கண்ணில் ரத்தக் கசிவு: நீரிழிவு, இரத்த அழுத்தம் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments