Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஞாபக மறதி நோய் வராமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டும்?

Advertiesment
நினைவாற்றல்

Mahendran

, புதன், 16 ஏப்ரல் 2025 (20:07 IST)
இப்போது நினைவாற்றல் என்பது ஒரு பெரும் சவாலாகவே மாறியுள்ளது. ஆனால் அதை கைவிட முடியாது. நினைவாற்றலை மேம்படுத்த, சில பழக்கங்களை தவிர்க்க முடியாது. அதற்காகவே ஒமேகா 3 கொழுப்பு அமிலம் முக்கியப் பங்கு வகிக்கிறது. இது மூளையின் செயல் திறனை மேம்படுத்தி, அல்ஜீமர் நோயைக் கட்டுப்படுத்துகிறது.
 
இது மத்தி, நெத்திலி, சால்மன் போன்ற மீன்களில் நிறைந்திருக்கிறது. சைவ உணவுகளில் ப்ளக்ஸ் விதை, வால்நட், சோயா பீன்ஸ் மற்றும் புதினாவில் காணப்படுகிறது. உணவின் வழியாகச் சேர்த்தால், பிற சத்துகளும் உடலுக்கு பயனளிக்கின்றன. கர்ப்பிணிகள் ஒமேகா 3 பெறாவிடில், குழந்தைகளின் மன வளர்ச்சி பாதிக்கப்படலாம்.
 
நினைவுத்திறன் குறைவால் ஏற்படும் பதற்றம், மறதியை மேலும் அதிகரிக்கச் செய்யும். அதனால், மனநிலை அமைதியாக இருக்க முக்கியம். வாழ்வின் ஒழுங்கின்மையும், தூக்கமின்மையும் முக்கிய காரணங்கள். தக்க சமயம் தூக்கம், சீரான உணவு, நியமம் உள்ள வாழ்க்கை முக்கியம். தினசரி வேலைகளுக்குப் பட்டியல் தயாரித்து, செய்யவேண்டியவற்றை எழுதிக் கொள்வது நல்ல பழக்கம்.
 
சின்ன விளையாட்டுகள், புதிர்கள் மூளையைச் சுறுசுறுப்பாக வைத்திருக்கும். நெருங்கிய நண்பர்களுடன் உரையாடுங்கள். சமூக வலைதளங்களில் ஈடுபடுங்கள். புத்தகம் படிக்கவும், உலக நிகழ்வுகளைப் பற்றி தெரிந்துகொள்ளவும் முயற்சி செய்யுங்கள்.
 
இவ்வாறு தொடர்ச்சியான பயிற்சி மூலம் நினைவாற்றலை நம்மால் கட்டுக்குள் வைக்க முடியும்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிகரித்து வரும் பெருங்குடல் புற்றுநோய்! வராமல் தடுப்பது எப்படி?