அதிக சத்துக்கள் எதில் உள்ளது ? வெள்ளை கொய்யாவா அல்லது சிவப்பு கொய்யாவா?

Mahendran
திங்கள், 22 செப்டம்பர் 2025 (18:30 IST)
கொய்யாப்பழம் அனைத்து பருவங்களிலும் கிடைக்கும் ஒரு பிரபலமான பழம். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட வகைகள் இருந்தாலும், வெள்ளை மற்றும் சிவப்பு கொய்யா வகைகளே பெரும்பாலானோருக்கு தெரிந்தவை. இவை இரண்டும் ஆரோக்கியமானவை என்றாலும், சுவை, ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கிய பயன்களில் சில வேறுபாடுகள் உள்ளன.
 
வெள்ளை கொய்யா சிவப்பு கொய்யாவை விட அதிக இனிப்பு சுவை கொண்டது. இதில் அதிக சர்க்கரை, ஸ்டார்ச் மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளன. வெள்ளை கொய்யாவில் விதைகளின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க விரும்புவோருக்கு இது சிறந்த தேர்வாகும்.
 
சிவப்பு கொய்யாவில் நீர்ச்சத்து அதிகமாகவும், சர்க்கரை மற்றும் வைட்டமின் சி குறைவாகவும் உள்ளது. இதில் உள்ள கரோட்டினாய்டுகள், குறிப்பாக லைகோபீன், அதன் சிவப்பு நிறத்திற்கு காரணமாகும். லைகோபீன் ஒரு சக்திவாய்ந்த ஆன்டிஆக்சிடென்ட் ஆகும்.
 
இரண்டு வகை கொய்யாக்களும் ஆரோக்கியமானவை என்றாலும், சிவப்பு கொய்யா அதிக ஆன்டி ஆக்சிடென்ட்கள், வைட்டமின் ஏ மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் காரணமாக ஊட்டச்சத்து மிக்கதாகக் கருதப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உருளைக்கிழங்கு: நன்மையா, தீமையா? - அறிந்துகொள்ள வேண்டிய உண்மைகள்

வாழைத்தண்டு உணவில் சேர்ப்பதால் ஏற்படும் அற்புதமான நன்மைகள்..!

உடல் எடையை எளிய முறையில் குறைக்க அற்புதமான 5 வழிகள்!

ரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கும் பாலக் கீரை! அதிசய பலன்கள் தரும் எளிய சமையல் முறை

முட்டையின் வெள்ளைக்கருவில் இருக்கும் வைட்டமின்கள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments