Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நொடிக்கு 1 ஜிபி வேகம்: ஜியோ ஜிகா ஃபைபர் அறிமுகம்!

Advertiesment
நொடிக்கு 1 ஜிபி வேகம்: ஜியோ ஜிகா ஃபைபர் அறிமுகம்!
, வெள்ளி, 6 ஜூலை 2018 (14:16 IST)
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஆண்டு பொதுக்குழு நடைபெற்றது. இந்த நிகழ்வில் ரிலையன்ஸ் ஜியோ தலைவர் முகேஷ் அம்பானி ஜியோ போன் 2, ஜியோ ஃபைபர் சேவைகளை அறிமுகம் செய்தார். 
 
நொடிக்கு அதிகபட்சம் 1 ஜிபி வேகம் வழங்கும் இந்த புதிய ஜியோ பிராட்பேன்ட் சேவையானது உலகின் மிகப்பெரிய பசுமைவழி பிராட்பேன்ட் சேவையாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த சேவை நாடு முழுக்க 1,100 நகரங்களில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஜியோ ஜிகா ஃபைபருடன் ஜிகா ஃபைபர் ரவுட்டர், ஜியோ ஜிகா செட்-டாப் பாக்ஸ் வழங்கப்படுகிறது. 
 
ஜியோ செட்-டாப் பாக்ஸ் கொண்டு மற்ற ஜிகா டிவி சாதனம் மற்றும் அனைத்து நெட்வொர்க் மொபைல் இணைப்புகளிலும் வீடியோ கால் மேற்கொள்ள முடியும்.
 
பயனர்கள் தங்களின் வி.ஆர். ஹெட்செட்களை ஜியோ ஜிகா ஃபைபர் நெட்வொர்க்கில் இணைத்து தகவல்களை 4கே ரெசல்யூஷனில் 360 கோணங்களில் பயன்படுத்த முடியும்.
 
ஜிகா டிவி சேவையை பொருத்த வரை சந்தாதாரர்கள் வாய்ஸ் கமான்ட் வசதி கொண்ட டிவி ரிமோட் மூலம் ஜியோ செயலிகளை பயன்படுத்த முடியும். ஜியோ ஃபைபர் இணைப்பு பெற்றிருக்கும் மற்ற டிவிக்களுக்கு கால் செய்ய முடியும்.
 
ஜியோ ஜிகா ஃபைபர் சேவைக்கான முன்பதிவுகள் ஆகஸ்டு 15 ஆம் தேதி துவங்குகிறது. மைஜியோ ஆப் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் முன்பதிவு செய்யலாம். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே நேரத்தில் தேர்தல் ; அதிமுக எதிர்ப்பு : பயம் காரணமா?