ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது இலவச வாய்ஸ் கால் மற்றும் இலவச இண்டர்நெட் சேவை. தமிழகத்தில் உள்ள குக்கிராமங்களில் கூட தற்போது இண்டர்நெட் உபயோகம் அதிகம் உள்ளது என்றால் அதற்கு ஒரு முக்கிய காரணம் ஜியோ வழங்கும் இலவச சேவையினால்தான்.
ஆனால் அதே நேரம் திடீர் திடீரென ஜியோ சேவை முடங்குவதாகவும், சப்வே உள்ளிட்ட சில பகுதிகளில் சிக்னல் கிடைப்பதில்லை என்றும் புகார் எழுந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில மணி நேரங்களாக தமிழகம் முழுவதும் ஜியோ சிம் இயங்கவில்லை என்றும் இதனால் வாய்ஸ்கால், இண்டர்நெட் உள்பட அனைத்தும் முடங்கியுள்ளதாகவும் சமூக வலைத்தளங்கள் மூலம் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.
தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் ஜியோ சேவை முடங்கியுள்ளதாகவும் இன்று இரவு ஒன்பது மணிக்குள் சேவை மீண்டும் தொடரும் என்றும் கூறப்படுகிறது. ஏர்செல் திடீரென முடங்கியதால் அதன் வாடிக்கையாளர்கள் பலர் ஜியோவுக்கு மாறிய நிலையில் தற்போது ஜியோவும் முடங்கியுள்ளது பொதுமக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது