Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரூ.2,999-க்கு ஜியோ போன் 2: அம்பானி ஸ்மார்ட் மூவ்!

Advertiesment
ரூ.2,999-க்கு ஜியோ போன் 2: அம்பானி ஸ்மார்ட் மூவ்!
, வியாழன், 5 ஜூலை 2018 (13:16 IST)
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலைய்ன்ஸ் ஜியோ நிறுவனம், டெலிகாம் சந்தையை புறட்டிப்போட்டு வரும் நிலையில், அடுத்து ஜியோ போனை வெளியிட்டது. தற்போது இதன் இரண்டாம் வெர்ஷனாக ஜியோ போன் 2 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 
 
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவன ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் இதற்கான அறிவிப்பை முகேஷ் அம்பானி வெளியிட்டார். இந்த போனில் அனைத்து ஜியோ செயலிகளும் ஏற்கனவே இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கும். மேலும் 22 இந்திய மொழிகளில் ஜியோபோனினை பயன்படுத்த முடியும். 
 
இதன் விலை ரூ.2,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்டு 15 ஆம் தேதி முதல் இதன் விற்பனை துவங்குகிறது. இந்த நிகழ்வில் முன்பு வெளியான ஜியோபோனில் ஃபேஸ்புக், யூடியூப் மற்றும் வாட்ஸ்அப் வசதிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
 
ஜியோபோன் 2 சிறப்பம்சங்கள்:
 
# 2.4 இன்ச் QVGA TFT டிஸ்ப்ளே
# டூயல் கோர் பிராசஸர், 512 எம்பி ராம்
# 4 ஜிபி இன்டெர்னல் மெமரி
# 2 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி செல்ஃபி கேமரா
# 4ஜி வோல்ட்இ, வோ-வைபை, ஜிபிஎஸ்
# 2000 எம்ஏஹெச் பேட்டரி திறன் 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உறவின் உச்சகட்டத்தில் காதலி மரணம் : காதலன் பரபரப்பு வாக்குமூலம்