Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அயனில் வெளிநாட்டு ஸ்டண்ட் மாஸ்டர்!

Webdunia
வியாழன், 31 ஜூலை 2008 (16:18 IST)
வெளிநாட்டு சண்டைக் கலை நிபுணர்களை தமிழ்ப் படத்தில் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது.

தசாவதாரத்தில் ஒன்றுக்கு மூன்று சண்டைக் கலை நிபுணர்கள் பயன்படுத்தப்பட்டனர். சத்யம் படத்தில் பிரமாண்ட சேஸிங் காட்சி வருகிறது. இந்தக் காட்சியை வடிவமைத்ததும், படம் பிடித்ததும் வெளிநாட்டிலிருந ்த ு வரவழைக்கப்பட்டவர்கள்.

விக்ரம் நடிக்கும் கந்தசாமி சண்டைக் காட்சிகள் வித்தியாசமான முறையில் படமாக்கப்பட்டு வருகிறது. படத்தில் மெக்சிகோ காளை சண்டையும் உண்டு. இதனை வெளிநாட்டு சண்டைக் கலை நிபுணர்களே வடிவமைக்கின்றனர்.

அயன் படத்துக்கு சண்டைக் காட்சி அமைப்பவர் கனல் கண்ணன். சமீபத்தில் ஆப்ரிக்காவில் சூர்யா வில்லன்களுடன் மோதும் காட்சி படமாக்கப்பட்டது. ரிஸ்க்கான இந்த சண்டைக் காட்சியை அமைக்க கனல் கண்ணனுக்கு உதவியவர் பிரான்ஸ். இவர் அந்நாட்டு சண்டைக் கலை நிபுணர்.

ஹாலிவுட் படங்கள் கடை கோடி கிராமம் வரை செல்வதால், தமிழ்ப் படங்களில் சண்டைக் காட்சிகளுக்கு அதிக கவனம் செலுத்துவது தவிர்க்க முடியாததாகிவிட்டது. வெளிநாட்டு சண்டைக் கலை நிபுணர்களை பயன்படுத்துவதற்கு இதுவே காரணம்!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஷூட்டிங் தொடங்கியதும் முடிந்த வெளிநாட்டு வியாபார உரிமை… மாஸ் காட்டிய ‘தளபதி 69’ படக்குழு!

கார்த்திக் சுப்பராஜின் அடுத்த படத்தில் மாதவன்!

கமல் பிறந்தநாளில் வெளியாகும் ‘தக் லைஃப்’ முக்கிய அப்டேட்!

அமரன் படத்தில் முகுந்தின் சாதிய அடையாளத்தை காட்டாதது ஏன்? - இயக்குனர் விளக்கம்!

சிம்பு த்ரிஷா காதல் காட்சிகளை படமாக்கிய மணிரத்னம்?... தக் லைஃப் ஷூட்டிங் அப்டேட்!

Show comments