Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிதானத்தை இழந்த கோலி வாக்குவாதம்… தண்டம் விதித்த பிசிசிஐ… !

vinoth
செவ்வாய், 23 ஏப்ரல் 2024 (08:20 IST)
நேற்று முன்தினம் நடந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கடுமையாக போராடி வெற்றியின் விளிம்பில் இருந்து ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்றது ஆர் சி பி அணி. இதைப் பார்த்த ஆர் சி பி ரசிகர்கள் விரக்தியின் உச்சத்துக்கே சென்றுவிட்டனர்.

இந்த போட்டியில் பல நாடகிய தருணங்கள் அரங்கேறின. அதில் ஒன்றுதான் கோலியின் சர்ச்சைக்குரிய விக்கெட். கே கே ஆர் வீர்ர ஹர்ஷத் ராணா வீசிய உயரம் அதிகமான பந்தில் கோலி கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். ஆனால் அந்த பந்து இடுப்புக்கு மேல் வந்த பந்து என்பதால் நடுவர்கள் நோ பாலுக்கு ரிவ்யூ செய்தனர்.

ரிவ்யூவில் பந்து கோலியின் இடுப்புக்கு மேல் வந்தாலும் அவர் கிரீஸை விட்டு வெளியே நின்றதால், கிரிஸுக்குள் செல்லும்போது அந்த பந்து நிர்ணயிக்கப்பட்ட உயரத்திற்குள்ளாகவே இருந்தது என கண்டறியப்பட்டது. இதனால் கோலி அவுட் என அறிவிக்கப்பட்டார். இதனால் அதிருப்தியடைந்த அவர் கள நடுவர்களோடு கோபமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அந்த சூடான சம்பவம் மைதானத்தில் கவனம் பெற்றது. ஆனால் கோலியின் இந்த நடவடிக்கை விதிகளுக்குப் புறம்பானது என்பதால் அவருக்குப் போட்டிக் கட்டணத்தில் 50 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சச்சினின் முக்கியமான சாதனையைத் தகர்த்த ஜோ ரூட்!

என்னை சுற்றி எழுந்துள்ள சர்ச்சைகளைக் கண்டுகொள்வதில்லை… வைபவ் சூர்யவன்ஷி பதில்!

சாம்பியன்ஸ் கோப்பையை ஹைபிரிட் மாடலில் நடத்த ஒத்துக்கொண்ட பாகிஸ்தான்… வைத்த நிபந்தனைகள் இதுதான்!

ரோஹித் வந்தால் கே எல் ராகுல் எங்கு இறங்கவேண்டும்?.. புஜாரா சொல்லும் ஆலோசனை!

இந்தியில் சமூகவலைதளக் கணக்குகள்… ரசிகர்களிடம் எதிர்ப்பை சம்பாதிக்கும் RCB!

அடுத்த கட்டுரையில்
Show comments