Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஹர்திக் பாண்ட்யா மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார்… முன்னாள் இந்திய வீரர் கருத்து!

Advertiesment
ஹர்திக் பாண்ட்யா மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார்… முன்னாள் இந்திய வீரர் கருத்து!

vinoth

, திங்கள், 22 ஏப்ரல் 2024 (11:14 IST)
இந்த ஐபிஎல் தொடரில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே சொதப்பினாலும் அனைவராலும் பேசப்படும் ஒரு பெயராக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா இடம்பெற்றுள்ளார். குஜராத் டைட்டன்ஸ் அணிக்குக் கேப்டனாக இருந்து வெற்றிகரமாக ஒரு கோப்பையையும் ஒருமுறை இரண்டாம் இடத்துக்கும் அணியை வழிநடத்திச் சென்றார் ஹர்திக் பாண்ட்யா. ஆனால் அவர் திடீரென மும்பை இந்தியன்ஸ் அணியால் வாங்கப்பட்டு அந்த அணிக்கு கேப்டனாக்கப் பட்டார். இந்த முடிவு மும்பை இந்தியன்ஸ் அணி ரசிகர்களுக்கே பிடிக்கவில்லை.

அதனால் அவர் டாஸ் போட செல்லும்போதும், களமிறங்கும் போது அவரை தாக்கி கடுமையாக ஏளனம் செய்து கோஷங்களை எழுப்பி வருகின்றனர். நேற்றைய சி எஸ் கே அணிக்கு எதிரான போட்டியிலும் இது தொடர்ந்தது. அதற்கேற்றார் போல ஹர்திக் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் சொதப்பி வருகிறார். ஆனால் அவர களத்தில் மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருப்பது போல காட்டிக் கொள்கிறார். இது மேலும் அவர் மேல் விமர்சனங்கள் எழ வழிவகுக்கிறது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா பாண்ட்யாவுக்கு ஆதரவாக பேசியுள்ளார். அதில் “பாண்ட்யா அவரை பற்றி பரவும் மீம்ஸ்களாலும் ட்ரோல்களாலும் காயமடைந்துள்ளார். இதனால் அவருக்கு மனதளவில் அழுத்தம் அதிகமாகியுள்ளது. எந்த ஒரு வீரர் மீதும் இவ்வளவு வன்மம் வெளிப்படக் கூடாது. அவரை பற்றி பரவும் மீம்ஸ்களை பார்த்து நாம் சிரிக்கவோ பிறருக்கு அனுப்பவோக் கூடாது.” என தெரிவித்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

“நான் அவர்களுக்காக நிறைய விளையாடி கோப்பைகளை வெல்ல உதவியுள்ளேன்” –சிஎஸ்கே தன்னை எடுக்காதது குறித்து ரெய்னா!