Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சந்தீப் ஷர்மா அபார பவுலிங்… திலக் வர்மா அரைசதம்- மும்பை அணி நிர்ணயித்த எளிய இலக்கு!

vinoth
திங்கள், 22 ஏப்ரல் 2024 (21:23 IST)
ஐபிஎல் தொடரில் இன்று ஜெய்ப்பூரில் நடந்து வரும் 38 ஆவது போட்டியில் மும்பை மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணிக் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா முதலில் பேட் செய்ய முடிவு செய்தார்.

அதன்படி பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி ஆரம்ப ஓவர்களிலேயே ரோஹித், இஷான் கிஷான் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரின் விக்கெட்களை இழந்தது. ஒரு கட்டத்தில் திலக் வர்மா மற்றும் நேஹல் வதேரா ஆகியோர் சிறப்பாக விளையாடி அணியை மீட்டெடுத்தனர்.

திலக் வர்மா 45 பந்துகளில் 65 ரன்களும் வதேரா 49 ரன்களு சேர்த்து அவுட் ஆகினர், அதன் பிறகு வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களில் 179 ரன்கள் சேர்த்தது. ராஜஸ்தான் தரப்பில் சந்தீப் ஷர்மா அபாரமாக பந்துவீசி 18 ரன்கள் மட்டும் கொடுத்து ஐந்து விக்கெட்களை வீழ்த்தினார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இருக்கும் ஃபார்முக்கு 180 என்பது எளிய இலக்குதான் என்பதால் மும்பை அணி கடுமையாக போராட வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேவலமான பேட்டிங்.. மைதானத்தை விட்டு வெளியேறும் சிஎஸ்கே ரசிகர்கள்..!

Power Playயில் மோசமான தொடக்கம்.. 20 டாட் பால்கள்.. 2 விக்கெட்டுக்கள்.. தலைநிமிராத சிஎஸ்கே..!

டாஸில் தோல்வி அடைந்த தோனி.. கொல்கத்தா எடுத்த முடிவு என்ன? ஆடும் 11 பேர்கள் யார் யார்?

ருத்துராஜுக்கு பதில் சி எஸ் கே அணியில் இணைவது யார்?... நான்கு பேர் லிஸ்ட்டில்!

துரோகி வறான் பாரு.. ப்ராவோ வந்தபோது தோனி சொன்ன அந்த வார்த்தை! - வைரலாகும் வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments