இதனால்தான் ரிஷப் பண்ட்டுக்கு டெஸ்ட் கேப்டன் பதவி கொடுக்கப்படவில்லையா?... வைரலாகும் தகவல்!

vinoth
வெள்ளி, 15 ஆகஸ்ட் 2025 (08:35 IST)
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் திடீர் டெஸ்ட் ஓய்வு முடிவு இந்திய அணி ரசிகர்களுக்கு இன்னும் தீராத அதிர்ச்சியாகதான் உள்ளது. 36 வயதாகும் அவர் ஓய்வு முடிவை அறிவித்த போது ரசிகர்களுக்கு அதிர்ச்சியான ஒன்றாக அமைந்தது. கோலியின் இந்த திடீர் அறிவிப்புக்கு என்ன காரணம் என ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.

அதே நேரம் சமீபத்தில் ரோஹித் ஷர்மா ஓய்வை அறிவித்த நிலையில் இந்திய அணியின் அடுத்த டெஸ்ட் கேப்டன் யார் என்ற கேள்வியும் எழுந்தது. அப்போது பும்ரா, ரிஷப் பண்ட் என சில பெயர்கள் அடிபட்ட போதும் இளம் வீரரான ஷுப்மன் கில் டெஸ்ட் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். அவர் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சிறப்பாக விளையாடி தொடரை 2-2 என்று சமனில் முடித்தது.

இந்நிலையில் கிரிக்கெட் தொடர்பாக தொடர்ந்து செயல்பட்டு வரும் விக்ராந்த் குப்தா இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவி ஏன் ரிஷப் பண்ட்டுக்குக் கொடுக்கப்படவில்லை என்று பேசியுள்ளார். அதில் “ரிஷப் பண்ட் விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகிய இருவரும் அணியில் இருக்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டதாலேயே அவருக்குக் கேப்டன் பதவி கொடுக்கப்படவில்லை.” என்று தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

20 ஆட்டங்களுக்கு பின் டாஸ் வெற்றி: இந்திய அணி பந்துவீச்சு தேர்வு! இரு அணிகளிலும் மாற்றம்..!

2026 கால்பந்து உலகக்கோப்பை அட்டவணை: தொடக்க போட்டியில் மோதும் அணிகள் எவை எவை?

திருமண ஒத்திவைப்புக்கு பின் ஸ்மிருதி மந்தனாவின் முதல் இன்ஸ்டா போஸ்ட்.. மோதிரம் மிஸ்ஸிங்?

சதம் அடிக்காவிட்டால் நிர்வாணமாக நடப்பேன்: தந்தையின் சவாலுக்கு ஹைடன் மகள் கூறியது என்ன?

சச்சின் படைக்காத 3 டெஸ்ட் சாதனைகள்: ஜோ ரூட் முறியடித்தது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments