சத்தீஸ்கரை சேர்ந்த ஒரு இளைஞர் புது சிம் கார்டு வாங்கிய நிலையில் அவருக்கு ஆர்சிபி வீரர்களிடம் இருந்து போன் வந்ததும், தொடர்ந்து போலீஸ் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த மணீஷ் என்ற இளைஞர் சமீபத்தில் புதிய சிம் கார்டு ஒன்றை வாங்கியுள்ளார். வாங்கி சில நாட்களிலேயே அவருக்கு விராட் கோலி பேசுகிறேன், டி வில்லியர்ஸ் பேசுகிறேன் என பல எண்களில் இருந்து அழைப்பு வந்துள்ளது. யாரோ கிண்டல் செய்கிறார்கள் என மணிஷ் நினைத்துள்ளார்.
அதை தொடர்ந்து ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதாரிடமிருந்து அவருக்கு கால் வந்துள்ளது “நான் ரஜத் படிதார் பேசுகிறேன். இந்த சிம் எண் என்னுடையது. என்னிடம் திரும்ப கொடுத்து விடுங்கள்” என கேட்டுள்ளார். அதை ப்ராங்க் என நினைத்த மணிஷ் அப்படியா நான் தோனி பேசுகிறேன் என எகத்தாளம் செய்துள்ளார்.
அதை தொடர்ந்து சில மணி நேரங்களில் மணிஷ் வீட்டிற்கு போலீஸ் வந்து விசாரணை செய்துள்ளனர். அப்போதுதான் அவருக்கு தெரிந்தது தன்னிடம் பேசியவர் உண்மையான ரஜத் படிதார்தான் என்பது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K