Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீங்கள் எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும், எல்லா முறையும் அது நடக்காது.. தோனி குறித்து சேவாக் கருத்து!

Webdunia
திங்கள், 31 மார்ச் 2025 (13:52 IST)
ஐபிஎல் தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்படும் அணிகளில் ஒன்றாக எப்போதும் இருப்பது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. அந்த அணியின் நட்சத்திரமாக பல ஆண்டுகளாக தோனி இருந்து வருகிறார். கடந்த ஆண்டு அவர் கேப்டன் பொறுப்பை ருத்துராஜ் கெய்க்வாட்டிடம் ஒப்படைத்தார்.தோனி இன்னும் சில ஆண்டுகள்தான் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவார் என்பதால் அவரைப் பார்க்க அனைத்து மைதானங்களிலும் ரசிகர்கள் ஆர்வமாகக் கூடுகின்றனர்.

அதன் காரணமாக டிக்கெட் விலை பலமடங்கு அதிகமாக்கப்பட்டு கள்ளச்சந்தையில் விற்கப்படுகிறது. ஆனால் அணிக்கு தேவைப்படும் போது இறங்கி அதிரடியாக விளையாடாமல் தோனி கடைசியாக இறங்குகிறார். இதனால் போட்டியில் முடிவிலேயே பாதிப்பு ஏற்படுத்துகிறது. நேற்றைய போட்டியில் கடைசி மூன்று ஓவர்களில் 45 ரன்கள் தேவைப்பட்ட போது தோனி களத்தில் இருந்தும் அவரால் போட்டியை வெற்றிகரமாக முடித்துவைக்க முடியவில்லை.

இந்நிலையில் தோனி குறித்து பேசியுள்ள சேவாக் “இதுபோன்ற நிலைமை ஏற்படும் போது ஒரு வீரரால் ஒன்றிரண்டு போட்டிகளைதான் வெற்றிகரமாக முடிக்கமுடியும். அதுமட்டும்தான் நம் நினைவில் இருக்கும். தோனி அக்ஸர் படேலுக்கு எதிராகவும், இர்ஃபான் பதான் எதிராகவும் இதுபோல வெற்றிகரமாக முடித்துள்ளார்.  ஆனால் சமீபகாலமாக தோனியால் அப்படி போட்டியை முடித்து வைக்கமுடியவில்லை.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டி 20 என்றாலே பேட்ஸ்மேன்களைப் பற்றிதான் பேசுகிறார்கள்… ஆனால்?- ஷுப்மன் கில் கருத்து!

காட்டடி பேட்டிங் அனுகுமுறை இந்த தடவை வேலைக்காகல… அடுத்தடுத்து நான்கு தோல்விகளைப் பெற்ற SRH

தோனி இப்போது என்னுடன் அமர்ந்து கமெண்ட்ரி செய்துகொண்டிருக்க வேண்டும்.. நக்கலாக விமர்சித்த முன்னாள் வீரர்!

இனிமேல் சி எஸ் கே போட்டி பற்றி பேசமாட்டோம்… அஸ்வினின் யுட்யூப் சேனல் அறிவிப்பு!

இன்றைய போட்டியில் களமிறங்குகிறாரா பும்ரா… தோல்வியில் இருந்து மீளுமா மும்பை இந்தியன்ஸ்?

அடுத்த கட்டுரையில்
Show comments