உலகக் கோப்பை தொடரில் கோலி & ரோஹித் விளையாடுவது சந்தேகம்.. கங்குலி சொல்லும் காரணம்!

vinoth
திங்கள், 23 ஜூன் 2025 (08:48 IST)
இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் கடந்த ஆண்டு டி 20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட நிலையில் இந்த ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் ஓய்வை அறிவித்தனர்.

தற்போது அவர்கள் ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகின்றனர். இருவரும் 2027 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் விளையாடிவிட்டு ஓய்வை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது விராட் கோலிக்கு 36 வயதும், ரோஹித் ஷர்மாவுக்கு 37 வயதும் ஆகிறது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி இதுபற்றி பேசும்போது “2027 ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை அணியில் இருவரும் இடம்பிடிப்பது கடினமே. ஏனென்றால் ஆண்டுக்கு 15 ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடுவார்கள். என்னைப் போலவே அவர்களுக்கும் கிரிக்கெட் பற்றி நன்கு தெரியும் என்பதால் நான் அறிவுரை வழங்கத் தேவையில்லை. அவர்களின் ஓய்வு குறித்து அவர்கள்தான் முடிவு எடுக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியை அனுப்பலாமா? பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு..!

மூன்று ஃபார்மட்டுகளிலும் 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர்.. பும்ராவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டி.. 102 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி..!

தென்னாப்பிரிக்கா அணிக்கு திரும்பும் டேவிட் மில்லர்.. இந்திய அணியில் சுப்மன் கில்- ஹர்திக்.. இன்று முதல் டி20 போட்டி..!

உணர்ச்சிகளை வெளிப்படுத்தினால் கிரிக்கெட் வீரர்களுக்கு மரியாதை கிடைக்காது: அஸ்வின்

அடுத்த கட்டுரையில்
Show comments