Webdunia - Bharat's app for daily news and videos

Install App

99 ரன்னில் அவுட்டான புரூக்.. 2வது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா.. ஸ்கோர் விபரம்..!

Siva
திங்கள், 23 ஜூன் 2025 (07:44 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில், நேற்றைய மூன்றாம் நாள் முடிவில் இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது இந்தியா 96 ரன்கள் அதிகம் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 471 ரன்கள் எடுத்திருந்தது. இதில் ஜெய்ஸ்வால், கில் மற்றும் ரிஷப் பந்த் ஆகிய மூவரும் சதம் அடித்து அசத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் பதிலடி கொடுத்தது. 465 ரன்கள் எடுத்த நிலையில், போப் 106 ரன்களும், ஹாரி ப்ரூக் 99 ரன்கள் எடுத்து அவுட்டானார். இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 465 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
 
இந்த நிலையில், தற்போது இந்தியாவின் இரண்டாவது இன்னிங்ஸ் நடைபெற்று வருகிறது. கே.எல். ராகுல், கில்லுடன் களத்தில் விளையாடி வருகிறார். முதல் இன்னிங்ஸில் சதம் அடித்த ஜெய்ஸ்வால் நான்கு ரன்களுடன் அவுட்டானார் என்பதும், சாய் சுதர்சன் 30 ரன்கள் எடுத்து அவுட்டானார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இன்று நான்காம் நாள் ஆட்டம் என்ற நிலையில், இந்தப் போட்டி டிராவை நோக்கி செல்லுமா அல்லது முடிவு தெரியுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மண்ணில் 6-0 என்ற கோல் கணக்கில் படுதோல்வி.. அழுது கொண்டே வெளியேறிய நெய்மர்..!

இந்திய அணி ஆசியக் கோப்பைத் தொடரில் விளையாடவேக் கூடாது… இந்திய முன்னாள் வீரர் கருத்து!

டெவால்ட் பிரேவிஸ் குறித்து நான் இப்படிதான் சொன்னேன்… அஸ்வின் விளக்கம்!

ஆசியக் கோப்பை அணியில் ஷுப்மன் கில்லுக்கே இடமில்லையா?

அடுத்த கட்டுரையில்
Show comments