பில்லியனர் ஆன முதல் விளையாட்டு வீரர் என்ற சாதனையைப் படைத்த ரொனால்டோ!

vinoth
வியாழன், 9 அக்டோபர் 2025 (10:45 IST)
போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ உலகளவில் கவனம் பெற்ற விளையாட்டு வீரர்களில் ஒருவர்.  கால்பந்து உலகில் பல சாதனைகளைப் படைத்துள்ள ரொனால்டோ, அதற்கு வெளியேயும் பல சாதனைகளைப் படைத்துள்ளார். அதிகமாக சம்பாதிக்கும் கால்பந்துவீரர்களில் ஒருவரான ரொனால்டோ, உலகளவில் அதிக பாலோயர்கள் கொண்ட விளையாட்டு வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

கிளப் போட்டிகளில் கிட்டத்தட்ட அனைத்துக் கோப்பைகளையும் வென்றுவிட்டாலும், இன்னும் ரொனால்டோ கால்பந்து உலகக் கோப்பையை தனது அணிக்காக வெல்லவில்லை. தற்போது 38 வயதாகும் ரொனால்டோ சமீபத்தில் கால்பந்து போட்டிகளில் 900 கோல்கள் அடித்து புதிய சாதனையைப் படைத்தார்.

தற்போது அவர் மேலும் ஒரு சாதனைக்கு சொந்தக் காரர் ஆகியுள்ளார். விளையாட்டு வீரர்களில் பில்லியனரான முதல் வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். அவரின் தற்போதைய சொத்து மதிப்பு 1.4 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சஞ்சு சாம்சனுக்கு பதில் ஷுப்மன் கில் துவக்க ஆட்டக்காரர்: மாற்றம் ஏன்? சூர்யகுமார் விளக்கம்

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இனி ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா? டிகே சிவகுமார் முக்கிய தகவல்..!

திருமணம் ரத்து.. ஸ்மிருதி மந்தனாவின் அதிகாரபூர்வ அறிவிப்பு.. இன்ஸ்டா பதிவில் பரபரப்பு..!

வெற்றிக்கு பின் கேக் சாப்பிட மறுத்த ரோஹித் சர்மா.. என்ன பின்னணி?

ஜெய்ஷ்வால் சதம்.. ரோஹித், கோஹ்லி அரைசதம்.. 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments