Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கோலியைவிட ரோஹித் சர்மா சிறந்த பேட்ஸ்மேன் - பாகிஸ்தான் முன்னாள்

Advertiesment
Rohit sharma
, வெள்ளி, 3 பிப்ரவரி 2023 (23:26 IST)
சர்வதேச கிரிக்கெட்டில் கோலியை ரோஹித் சர்மா சிறந்தவர் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணி திறமையாக செயல்பட்டு முன்னணி அணியாகச் செயல்பட்டு வருகிறது.

முன்னாள் கேப்டனாக கோலி இருந்தபோது,  நம்பர் 1 இடத்தில் இருந்த இந்திய அணி, உலகக் கோப்பையில் தோல்வியைச் சந்தித்ததால், கடும் விமர்சனங்கால் கோலி பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, ரோஹித் சர்மா கேப்டனாகப் பொறுப்பு வகிக்கிறார்.

தற்போது ஒரு நாள் தரவரிசையில் இந்தியா 2 வது இடத்தில் உள்ளது.

இந்த நிலையில், விராட் கோலி மற்றும் ரோஹித்சர்மா பற்றி பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோஹைல் கூறியுள்ளதாவது:

விராட் கோலி சிறந்த பேட்ஸ்மேன். ஆனால், அவரை விட ரோஹித் சர்மா சிறந்த பேட்ஸ்மேன். கடந்த 12 ஆண்டுகளாக ரோஹித் தான் சர்வதேச கிரிக்கெட்டில் ஜொலிக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.
 

ALSO READ: இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான போட்டியைக் காணும் பிரதமர் மோடி
 
விராட் கோலி ஒரு நாள் கிரிக்கெட்டில் 46 சதங்களும், டெஸ்டில் 27 சதங்களும் அடித்துள்ள நிலையில், மொத்தம் 74 சதங்கள் அடித்துள்ளார், இன்னும் ஒரு நாள் போட்டியில் 4 சதங்கள் அடித்தால் அவர் சச்சின் சாதனையை முறியடித்துவிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஷுப்மன் கில் பற்றி விராட் கோலியின் கோச் சொன்ன கருத்து!