19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பை: இந்திய அணி அபார வெற்றி!
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	19 வயதுக்கு உட்பட்டவருக்கான மகளிர் டி20 உலக கோப்பை போட்டியில் இன்று அரையறுதியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய நிலையில் இந்திய அணி அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. 
 
									
										
			        							
								
																	
	 
	இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 109 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனை அடுத்து 110 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்தியா மகளிர் அணி 14.2 அவர்களின் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது . ஸ்வேதா அபாரமாக விளையாடி 61 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
									
											
							                     
							
							
			        							
								
																	
	 
	இதனை அடுத்து இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. தற்போது இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையே அரையிறுதி போட்டி நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் இந்திய மகளிர் அணி மோதும் என்பது குறிப்பிடத்தக்கது