தென்னாப்பிரிக்கத் தொடருக்குத் தயாராகும் ரிஷப் பண்ட்… உள்ளூர் போட்டிகளில் விளையாட முடிவு!

vinoth
செவ்வாய், 7 அக்டோபர் 2025 (09:17 IST)
இந்திய அணி உருவாக்கிய மிகச்சிறந்த விக்கெட்கீப்பர் & பேட்ஸ்மேனாக (டெஸ்ட் போட்டிகளில்) ரிஷப் பண்ட் உருவாகி வருகிறார். இந்திய அணியின் பேட்டிங் பின்வரிசையில் தன்னுடைய அதிரடி ஆட்டத்தால் தூக்கி நிறுத்தி வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த ஆண்டர்சன் டெண்டுல்கர் கோப்பைத் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இந்த தொடரில் மான்செஸ்டரில் நடந்த போட்டியில்  ரிஷப் பண்ட்  கிறிஸ் வோக்ஸ் வீசிய யார்க்கர் பந்தைக் காலில் வாங்கினார். இதன் காரணமாக அவருக்கு காலில் சிறு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அந்த காயத்தினுடனேயே அவர் அந்த இன்னிங்ஸில் மீண்டும் களமிறங்கி ஆடினார். ஆனால் அதன் பிறகு தொடரை விட்டு வெளியேறினார்.

இதன் காரணமாக தற்போது நடக்கும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் விளையாட முடியாமல் போனது. தற்போது குணமாகி வரும் ரிஷப் பண்ட், அடுத்து தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடக்கும் டெஸ்ட் தொடரில் மீண்டும் அணிக்குத் திரும்ப பயிற்சிகள் மேற்கொண்டு வருகிறார். அதன் காரணமாக ரஞ்சி போட்டிகளில் டெல்லி அணிக்காக அவர் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சஞ்சு சாம்சனுக்கு பதில் ஷுப்மன் கில் துவக்க ஆட்டக்காரர்: மாற்றம் ஏன்? சூர்யகுமார் விளக்கம்

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இனி ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா? டிகே சிவகுமார் முக்கிய தகவல்..!

திருமணம் ரத்து.. ஸ்மிருதி மந்தனாவின் அதிகாரபூர்வ அறிவிப்பு.. இன்ஸ்டா பதிவில் பரபரப்பு..!

வெற்றிக்கு பின் கேக் சாப்பிட மறுத்த ரோஹித் சர்மா.. என்ன பின்னணி?

ஜெய்ஷ்வால் சதம்.. ரோஹித், கோஹ்லி அரைசதம்.. 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments