தோனி அப்பவே எனக்கு அட்வைஸ் பண்ணார்… மனம்திறந்த முகமது சிராஜ்!

vinoth
திங்கள், 6 அக்டோபர் 2025 (13:29 IST)
இந்திய அணிக்காகக் கடந்த சில ஆண்டுகளாக மிகச்சிறப்பாக பங்களிப்பு செய்து வருகிறார் முகமது சிராஜ். பும்ரா, ஷமி போன்ற பவுலர்கள் காயத்தால் அவதிப்படும் நிலையில் சிராஜ் சற்றும் தளராத உத்வேகத்துடன் விளையாடி வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவரின் பங்களிப்பால்தான் இந்தியா தொடரை சமனில் முடித்தது.

ஆனாலும் சிராஜுக்குத் தொடர்ச்சியாக அணியில் இடம் கிடைப்பதில்லை. ஒரு நாள் மற்றும் டி 20 போட்டிகளில் அவருக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. தற்போது நடந்து வரும் வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் முதல் டெஸ்ட்டில் அவர் சிறப்பாக செயல்பட்டுள்ளார்.

இந்நிலையில் சிராஜ், முன்னாள் கேப்டன் தோனி தனக்குக் கொடுத்த அட்வைஸ் குறித்துப் பேசியுள்ளார். அதில் “நீ நன்றாக விளையாடினால் உலகமே உன்னோடு இருக்கும். பாராட்டு மழைப் பொழியும். ஒரே நாளில் ஹீரோவாகிவிடுவாய். ஆனால் அடுத்த மேட்ச்சில் சொதப்பினால் ஜீரோதான். ‘நீ கிரிக்கெட் விளையாடவே லாயக்கு இல்லை. உன் அப்பாவோடு சேர்ந்து ஆட்டோ ஓட்டு என்பார்கள். அதனால் பிறர் சொல்வதைப் பற்றிக் கவலைப்படாமல் விளையாடு’ என்றார்” எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் மினி ஏலம்: 350 வீரர்களுடன் இறுதிப் பட்டியல் வெளியீடு!

சஞ்சு சாம்சனுக்கு பதில் ஷுப்மன் கில் துவக்க ஆட்டக்காரர்: மாற்றம் ஏன்? சூர்யகுமார் விளக்கம்

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இனி ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா? டிகே சிவகுமார் முக்கிய தகவல்..!

திருமணம் ரத்து.. ஸ்மிருதி மந்தனாவின் அதிகாரபூர்வ அறிவிப்பு.. இன்ஸ்டா பதிவில் பரபரப்பு..!

வெற்றிக்கு பின் கேக் சாப்பிட மறுத்த ரோஹித் சர்மா.. என்ன பின்னணி?

அடுத்த கட்டுரையில்
Show comments