பவர்ப்ளேயில் ஆர்சிபியின் ஆதிக்கம்.. விக்கெட்டுகளை இழந்து தவிக்கும் பஞ்சாப்! RCB vs PBKS Live updates in Tamil

Prasanth Karthick
வியாழன், 29 மே 2025 (20:12 IST)

ஐபிஎல் இறுதிப் போட்டிக்கான பயணத்தில் இன்று RCB - PBKS அணிகள் மோதிக் கொள்ளும் நிலையில் ஆர்சிபியின் ஆதிக்கம் பவர்ப்ளேயில் பக்காவாய் அமைந்துள்ளது.

 

இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெறும் என்பதால் டாஸ் வென்றதுமே ஆர்சிபி பவுலிங்கை தேர்வு செய்தது. தேர்வு செய்ததற்கு ஏற்ப ரன்களை அதிரடியாக வீழ்த்தி வருகிறது. 

 

பஞ்சாபின் தொடக்க ப்ளேயரான ப்ரயான்ஷ் ஆர்யா 1.2 வது ஓவரிலேயே 7 ரன்களுடன் அவுட்டாகி வெளியேற அடுத்தடுத்து களமிறங்கிய ஜாஸ் இங்க்லிஸ் (4), ஷ்ரேயாஸ் ஐயர் (2) ரன்களில் அவுட்டாகினர். ப்ரப்சிம்ரன் சில பவுண்டரிகள், ஒரு சிக்ஸரை அடித்த போதும் 18 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார்.

 

அனைத்துமே அடித்து ஆட முயன்று கேட்ச் கொடுத்த விக்கெட்டுகள்தான். பஞ்சாபின் அவசரத்தை புரிந்துக் கொண்ட ஆர்சிபி பவுலர்கள் அழகாக அடித்து ஆடவிட்டு கேட்ச் பிடித்து வரிசையாக பஞ்சாப் வீரர்களை வெளியேற்றி வருகின்றன. தற்போதைய நிலவரப்படி 7 ஓவர்கள் முடிவில் 52 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து ஆபத்தான நிலைக்கு சென்றுக் கொண்டுள்ளது பஞ்சாப் அணி. நல்ல பார்ட்னர்ஷிப் அமையாவிட்டால் பஞ்சாப் ரன்களை குவிப்பது கடினமாகும்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓய்வு முடிவை திரும்பப் பெற்றார் வினேஷ் போகத் : 2028 ஒலிம்பிக்ஸில் மீண்டும் களம் காண்கிறாரா?

8 பவுண்டரிகள், 14 சிக்ஸர்கள்.. 85 பந்துகளில் 163 ரன்கள்.. U19 ஆசிய கோப்பையில் வைபவ் சூர்யவம்சி விளாசல்..!

காம்பீர் செய்த மிகப்பெரிய தவறு.. சூர்யகுமார் யாதவ் பேட்டிங் வரிசை குறித்து விமர்சனம்...!

இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா தோல்வி.. வரலாறு படைத்த தென்னாப்பிரிக்கா..!

விராத் கோஹ்லி, ரோஹித் சர்மா சம்பளம் ரூ.2 கோடி குறைக்கப்படுகிறதா? பிசிசிஐ முடிவுக்கு என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments