பரபரப்பாக நடந்து வரும் இந்தாண்டு ஐபிஎல் சீசனில் அதிகமான போட்டிகளில் வெற்றி பெற்று ஆர்சிபி, குஜராத், பஞ்சாப், மும்பை அணிகள் ஏற்கனவே ப்ளே ஆப் போட்டிகளுக்கு தகுதி பெற்றுவிட்டன. இந்நிலையில் தற்போது நடந்து வரும் போட்டிகள் ஒரு ஃபார்மாலிட்டிக்காக நடப்பது போல அமைந்தாலும், அதிலும் தகுதி பெறாத அணிகள் அட்டகாசம் செய்து வருகின்றன.
இப்போது தேர்வு பெற்ற அணிகளுக்குள் யார் முதலிரண்டு இடங்களைப் பிடித்து மிகவும் பாதுகாப்பான இடத்தைப் புள்ளிப் பட்டியலில் பிடிப்பது என்ற போட்டி எழுந்துள்ளது. அந்த வகையில் நேற்று நடந்த ஆர் சி பி அணிக்கு முக்கியமான போட்டியில் அந்த அணி சன் ரைசர்ஸ் ஐதராபாத்திடம் தோற்றுள்ளது.
இந்த போட்டியில் மெதுவாகப் பந்துவீசியக் காரணத்துக்காக இரு அணிக் கேப்டன்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஐதராபாத் அணிக் கேப்டன் பாட் கம்மின்ஸுக்கு இது முதல் முறை என்பதால் 12 லட்ச ரூபாயும், பெங்களூர் அணிக்கு இது இரண்டாவது முறை என்பதால் அந்த அணிக் கேப்டனுக்கு 24 லட்ச ரூபாயும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பெங்களூர் அணியின் வீரர்கள் அனைவருக்கும் தலா 6 லட்ச ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.