நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணியுடன் சன்ரைசர்ஸ் அணி மோதி அபார வெற்றி பெற்றுள்ளது.
பரபரப்பாக நடந்து வரும் இந்தாண்டு ஐபிஎல் சீசனில் அதிகமான போட்டிகளில் வெற்றி பெற்று ஆர்சிபி, குஜராத், பஞ்சாப், மும்பை அணிகள் ஏற்கனவே ப்ளே ஆப் போட்டிகளுக்கு தகுதி பெற்றுவிட்டன. இந்நிலையில் தற்போது நடந்து வரும் போட்டிகள் ஒரு ஃபார்மாலிட்டிக்காக நடப்பது போல அமைந்தாலும், அதிலும் தகுதி பெறாத அணிகள் அட்டகாசம் செய்து வருகின்றன.
நேற்று நடந்த போட்டியில் சன்ரைசர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 231 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக இஷான் கிஷன் 94 ரன்களை குவித்தார். தொடர்ந்து சேஸிங்கில் இறங்கிய ஆர்சிபியை கடுமையாக கண்ட்ரோல் செய்தது சன்ரைசர்ஸ்.
பில் சால்ட் - விராட் கோலி பார்ட்னர்ஷிப் காலியான பிறகு மற்ற அனைவரும் குறைவான ரன்களில் அவுட் ஆனார்கள். 19.5 ஓவர்களுக்கெல்லாம் மொத்த விக்கெட்டுகளையும் இழந்த ஆர்சிபி அணி 189 ரன்கள் மட்டுமே எடுத்து 42 ரன்கள் வித்தியாசத்தில் அவுட் ஆனது.
நேற்றைய போட்டியில் ஆர்சிபி வென்றிருந்தால் புள்ளி பட்டியலில் முதல் இடத்தைத் தொட வாய்ப்பிருந்த நிலையில் இந்த தோல்வி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Edit by Prasanth.K