நான் இதை ஏற்றுக் கொள்ளவே மாட்டேன்… பும்ரா ஓய்வு குறித்து ரவி சாஸ்திரி ஆதங்கம்!

vinoth
வியாழன், 3 ஜூலை 2025 (09:27 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று பர்மிங்ஹாம் நகரில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் தொடங்கியது.  இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்து வீச முடிவெடுத்தார்.

அதன்படி களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 310 ரன்கள் சேர்த்துள்ளது. கேப்டன் ஷுப்மன் கில் 110 ரன்களோடு களத்தில் விளையாடி வருகிறார். இந்த போட்டியில் இந்திய அணி பேட்டிங்கை வலுப்படுத்தும் விதமாக 8 பேட்ஸ்மேன்களோடு விளையாடி வருகிறது.

எதிர்பார்த்தது போலவே பும்ரா அணியில் இல்லை. இது குறித்து பேசியுள்ள ரவி சாஸ்திரி ‘’நீங்கள் உலகின் தலைசிறந்த பவுலரை வைத்துள்ளீர்கள். ஏழு நாள் ஓய்வுக்குப் பிறகும் அவரை அணியில் நீங்கள் எடுக்கவில்லை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நான் இதை ஏற்றுக்கொள்ள மாட்டேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராத் கோஹ்லி, ரோஹித் சர்மா சம்பளம் ரூ.2 கோடி குறைக்கப்படுகிறதா? பிசிசிஐ முடிவுக்கு என்ன காரணம்?

நடுவரை விரட்டி விரட்டி அடித்த வீரர்கள்.. கலவர பூமியான பாகிஸ்தான் மைதானம்..

கிரிக்கெட்டை தவிர வேறு எதுவும் வேண்டாம்.. திருமண ரத்துக்கு பிறகு மனம் திறந்த ஸ்மிருதி மந்தனா..

பாகிஸ்தானுக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியை அனுப்பலாமா? பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு..!

மூன்று ஃபார்மட்டுகளிலும் 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர்.. பும்ராவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments