இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று பர்மிங்ஹாம் நகரில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடக்கவுள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தயாராகி வருகின்றனர். போட்டிக்கான டாஸ் சற்று முன்னர் வீசப்பட்டது.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணிக் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்துவீச முடிவெடுத்துள்ளார். இந்த போட்டியில் இங்கிலாந்து அணி, முதல் போட்டியில் விளையாடிய அதே அணியோடுக் களமிறங்குகிறது. இந்திய அணியில் அதிரடியாக மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
எதிர்பார்த்தது போலவே பும்ரா இந்த போட்டியில் விளையாடவில்லை. அதே போல சாய் சுதர்சன் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோரும் நீக்கப்பட்டு நிதீஷ்குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த போட்டி நடைபெறும் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இந்திய அணி இதுவரை ஒரு போட்டியைக் கூட வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.