கேப்டன் பொறுப்பு ஏற்றபின் இரு டெஸ்ட்டிலும் கில் சதம்.. இதற்கு முன் இந்த சாதனையை செய்தவர்கள் யார் யார்?

Siva
வியாழன், 3 ஜூலை 2025 (07:57 IST)
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இப்போட்டியில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் சுப்மன் கில் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். இதன் மூலம், கேப்டன் பொறுப்பேற்ற பிறகு அடுத்தடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் சதம் அடித்த நான்காவது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
 
இந்த சாதனையை இதற்கு முன்னர் விஜய் ஹசாரே, சுனில் கவாஸ்கர், விராட் கோலி ஆகிய மூன்று இந்திய வீரர்கள் மட்டுமே செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த பட்டியலில் தற்போது சுப்மன் கில் நான்காவது வீரராக இணைந்துள்ளார்.
 
நேற்றைய ஆட்டத்தில், சுப்மன் கில் 216 பந்துகளில் 114 ரன்கள் எடுத்து, 12 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். முன்னதாக, தொடக்க ஆட்டக்காரர் ஜெயஸ்வால் 87 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தற்போது சுப்மன் கில்லுடன் ஜடேஜா களத்தில் விளையாடி வருகிறார். நேற்றைய ஆட்டநேர முடிவில், இந்திய அணி 85 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 310 ரன்கள் எடுத்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆஸ்திரேலியாவுக்கு இந்தியா கொடுத்த டார்கெட்.. யாருக்கு வெற்றி?

8 விக்கெட்டுக்களை இழந்த இந்திய அணி.. ஜாம்பா, பார்ட்லெட் அபார பந்துவீச்சு..!

அடுத்தடுத்து 2 போட்டிகளில் முதல்முறையாக டக்-அவுட்.. ஓய்வு பெறுகிறாரா விராத் கோஹ்லி?!

மீண்டும் விராத் கோஹ்லி டக் அவுட்.. நிதானமாக விளையாடும் ரோஹித் சர்மா.. இந்தியா ஸ்கோர்..!

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா எடுத்த அதிரடி முடிவு.. தொடரை இழக்காமல் தடுக்குமா இந்தியா?

அடுத்த கட்டுரையில்
Show comments