Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

73 ரன்கள் எடுத்தால் போதும்.. இன்றைய போட்டியில் புதிய சாதனை படைப்பாரா ஜோ ரூட்?

Advertiesment
ஜோ ரூட்

Mahendran

, புதன், 2 ஜூலை 2025 (14:33 IST)
இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட், டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக 3000 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை படைக்க வெறும் 73 ரன்கள் தொலைவில் உள்ளார்.
 
இன்று போட்டி நடைபெறும் பிர்மிங்காம் மைதானத்தில், ஜோ ரூட் இங்கிலாந்து அணிக்காக மட்டுமல்லாமல், ஒட்டுமொத்தமாகவே அதிக ரன்கள் குவித்த வீரராக உள்ளார். இந்த மைதானத்தில் அவர் 9 டெஸ்ட் போட்டிகள், 16 இன்னிங்ஸ்களில் விளையாடி 70.76 சராசரியுடன் 920 ரன்கள் எடுத்துள்ளார். இதில் மூன்று சதங்களும், ஐந்து அரைசதங்களும் அடங்கும். அவரது அதிகபட்ச ஸ்கோர் 142* ஆகும்.
 
இந்த மைதானத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 1000 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை படைக்க, ஜோ ரூட்டிற்கு இன்னும் 80 ரன்கள் தேவை. இந்த சாதனையை படைப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இன்று தொடங்க இருக்கும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இந்திய நேரப்படி 3.30 மணிக்கு ஆரம்பமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாகவும் மைதானத்திற்கு ரசிகர்கள் வருகை தந்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
முதல் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த நிலையில் இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்று சமநிலையை கொண்டு வருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இங்கிலாந்துக்கு எதிரான மகளிர் டி20 போட்டி.. இந்திய வீராங்கனை உலக சாதனை..!