Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் புதிய சாதனைப் படைத்த பேட் கம்மின்ஸ்!

vinoth
செவ்வாய், 7 ஜனவரி 2025 (11:53 IST)
பேட் கம்மின்ஸ் ஆஸி அணிக்கு கேப்டனாக அறிவிக்கப்பட்டதில் இருந்து அவர் தொட்டதெல்லாம் வெற்றியாகி வருகிறது. கடந்த ஆண்டு தொடக்கத்தில் கடந்த நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி கோப்பையை வென்றது அவர் தலைமையிலான அணி.

இந்நிலையில் தற்போது பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணியை வீழ்த்தி பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரையும் கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளது. இதன் மூலம் அவர் கிரீடத்தில் மேலும் ஒரு சிறகு சூடப்பட்டுள்ளது. தொடர்ந்து இரண்டாம் முறையாக WTC இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளது.

இப்படி அடுத்தடுத்து பல சாதனைகளைப் பேட் கம்மின்ஸ் படைத்து வருகிறார். அந்த வரிசையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் முதல் முதலாக 200 விக்கெட்கள் வீழ்த்திய பவுலர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். அவருக்கு அடுத்த இடங்களில் நாதன் லயன் 196 விக்கெட்களோடும், அஸ்வின் 195 விக்கெட்களோடும் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

PSL தொடரை வேறு நாட்டுக்கு மாற்றிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!

‘கண்ணுக்குக் கண் என்றால் உலகமே பார்வையற்றதாகிவிடும்’ –அம்பாத்தி ராயுடுவின் பதிவு!

தரம்ஷாலாவில் இருக்கும் கிரிக்கெட் வீரர்களை அழைத்துவர சிறப்பு ரயில் ஏற்பாடு!

ஐபிஎல் தொடர் ரத்தாகுமா?... பிசிசிஐ துணைத் தலைவர் அளித்த பதில்!

பதற்றமான சூழல். ஐபிஎல் தொடரைத் தள்ளிவைக்க பிசிசிஐ ஆலோசனை!

அடுத்த கட்டுரையில்
Show comments