Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோலி டீம் vs கம்பீர் டீம்… இந்த ஐபிஎல் சீசனின் அனல் பறக்கும் போட்டி… டாஸ் அப்டேட்!

கோலி டீம் vs கம்பீர் டீம்… இந்த ஐபிஎல் சீசனின் அனல் பறக்கும் போட்டி… டாஸ் அப்டேட்!

vinoth

, வெள்ளி, 29 மார்ச் 2024 (19:04 IST)
ஐபிஎல் 17 ஆவது சீசனின் 10 ஆவது போட்டி இன்று சின்னச்சாமி ஸ்டேடியம் பெங்களுருவில் நடக்கிறது. இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டி ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டியாக மாறியுள்ளது. ஏனென்றால் பெங்களூர் அணியின் கோலிக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீருக்கும் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் நடந்த மோதல்தான். அப்போது லக்னோ அணியின் ஆலோசகராக இருந்த கம்பீர், கோலியிடம் சண்டை போட்டது அப்போது வைரலானது.

பல ஆண்டுகளுக்கு முன்னர் கொல்கத்தா அணிக்கு கம்பீர் கேப்டனாக இருந்த போது கோலியிடம் ஒருமுறை மோதலில் ஈடுபட்டார். இப்போது இவர்கள் இருவருக்கும் இடையே ஒரு வரலாறு இருக்கும் நிலையில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்நிலையில் சற்று முன்னர் டாஸ் வீசப்பட்ட நிலையில் டாஸை வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது.

பெங்களூர் அணி விவரம்
விராட் கோலி, ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ்(c), கேமரூன் கிரீன், ரஜத் படிதார், க்ளென் மேக்ஸ்வெல், அனுஜ் ராவத்(w), தினேஷ் கார்த்திக், அல்ஜாரி ஜோசப், மயங்க் டாகர், முகமது சிராஜ், யாஷ் தயாள்

கொல்கத்தா அணி விவரம்
பிலிப் சால்ட்(w), வெங்கடேஷ் ஐயர், ஷ்ரேயாஸ் ஐயர்(c), ராமன்தீப் சிங், ரின்கு சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன், மிட்செல் ஸ்டார்க், அனுகுல் ராய், ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சேப்பாக்கத்துல முடியாதது சின்னசாமி ஸ்டேடியத்தில் முடியுமா? கொல்கத்தாவை வீழ்த்துமா RCB?