Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மரண பயத்த காட்டிட்டான் பரமா..! ரின்கு சிங் அதிரடியால் கலங்கிய லக்னோ!

Rinku singh
, ஞாயிறு, 21 மே 2023 (05:24 IST)
நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியை எதிர்கொண்ட லக்னோ அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றுள்ளது.

நேற்று நடந்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி ப்ளே ஆப் தகுதி பெற லக்னோ அணிக்கு முக்கியமான போட்டியாக இருந்தது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் 17 புள்ளிகளுடன் லக்னோவின் ப்ளே ஆப் தகுதி உறுதிப்படுத்தப்படும்.

முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்களை சேர்த்தது. இந்த போட்டியில் வென்றாலும் கொல்கத்தா அணியால் ப்ளே ஆப் செல்ல முடியாது என்றாலும் கூட போட்டி முழுவதிலுமே லக்னோ அணியை கதிகலக்கும் வேலைகளை செய்து வந்தது.

பந்து வீச்சின்போதே ஓப்பனிங் பேட்ஸ்மேன் கரன் சர்மாவை 3 ரன்களில் தூக்கியதுடன், லக்னோவின் நம்பிக்கை நட்சத்திரம் மார்கஸ் ஸ்டாய்னிஸை டக் அவுட் செய்து அதிர்ச்சி கொடுத்தது. யாருமே 30 ரன்களை தாண்ட முடியாத நிலையில் கடைசியில் களமிறங்கிய நிக்கலஸ் பூரன் நின்று ஒரு அரைசதம் அடித்ததால் ரன்கள் அதிகரித்தது.

webdunia


அடுத்ததாக பேட்டிங்கில் இறங்கிய கொல்கத்தா அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஜேசன் ராய் 48 ரன்களை குவித்து அதிர்ச்சி கொடுத்தார். ஆனால் சூதானமாக விளையாடிய லக்னோ அடுத்தடுத்த விக்கெட்டுகளை எளிதாக வீழ்த்தியது. ஆனால் கொல்கத்தாவின் அதிரடி ஆட்டக்காரர் ரின்கு சிங் உள்ளே நுழைந்த பின் லக்னோவால் சமாளிக்க முடியவில்லை.

கொல்கத்தா அணி தோற்றுவிடும் என்றே பலரும் நினைத்து வந்த நிலையில் கடைசி ஓவர்களில் ரின்கு சிங் பவுண்டரிகளும், சிக்ஸர்களுமாக அடித்து விளாச ரன்கள் அதிகரித்துக் கொண்டே சென்றது. 19வது ஓவரில் நவீன் உல் ஹக்கின் பந்துகளில் ரின்கு அடித்த ஹாட்ரிக் பவுண்டரிகள் லக்னோவை கதிகலங்க செய்தது. லக்னோ தனது ப்ளே ஆப் கனவில் துண்டை போட்டுக் கொண்டு போக வேண்டியதுதான் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

176 ரன்கள் அடித்து 177 ரன்களை இலக்காக வைத்த லக்னோவுக்கு 175 ரன்கள் வரை நெருங்கிய கொல்கத்தா அணி 1 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. லக்னோ அணி வென்றாலும் “ஜெயிக்கிறோமோ தோக்குறோமோ.. முதல்ல சண்ட செய்யணும்” என்று நின்று அடித்த ரின்கு சிங் பலரையும் கவர்ந்து விட்டார்.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிரடி சரவெடி ஆட்டம்.. ப்ளே ஆப்க்கு முன்னேறிய சிஎஸ்கே, லக்னோ அணிகள்!