Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐபிஎல் -2023; கிளேசன் அதிரடி சதம்....பெங்களூர் அணிக்கு வெற்றி இலக்கு இதுதான்

ஐபிஎல் -2023; கிளேசன்  அதிரடி சதம்....பெங்களூர் அணிக்கு வெற்றி இலக்கு இதுதான்
, வியாழன், 18 மே 2023 (21:41 IST)
இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 186  ரன்கள் அடித்து, பெங்களூருக்கு 187 ரன்கள் வெற்றி இலக்காக  நிர்ணயித்துள்ளது.

இன்றைய ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் டூ பிளசிஸ் பந்து வீச்சு தேர்வு செய்தார்.

அதன்படி, முதலில் ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில், ஷர்மா 11 ரன்னும், திரிபாதி 15 ரன்னும், மார்க்ரம் 18 ரன்னும், கிளேசன் 104  ரன்களும், ப்ரூக் 27 ரன்னும் அடித்தனர், எனவே 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 186  ரன்கள் அடித்து, பெங்களூருக்கு 187 ரன்கள் வெற்றி இலக்காக  நிர்ணயித்துள்ளது.

பெங்களூர் அணி தரப்பில் சிராஜ், அகமத், படேல் ஆகியோர் தலா  1 விக்கெட் கைப்பற்றினர்.. பிரேஸ் வெல் 2 விக்கெட் கைப்பற்றினார்.

தற்போது பேட்டிங் செய்து வரும் பெங்களூரு அணி 3.3. ஓவரில் 39 ரன்னும் விளையாடி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்த ஜெர்சி போட்டா ஜெயிக்கலாம்? கால்பந்து ஜெர்சியை போடும் லக்னோ!? – காரணம் என்ன?