Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ப்ளே ஆப் கனவில் ஆர்சிபி.. பதட்டத்தில் பல்தான்ஸ்! விசிலடிக்கும் சிஎஸ்கே! – ப்ளே ஆப் யாருக்கு?

Advertiesment
IPL 2023
, வெள்ளி, 19 மே 2023 (08:47 IST)
நேற்றைய ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணி சிறப்பான வெற்றியை பெற்றுள்ள நிலையில் ப்ளே ஆப் சொல்ல போட்டி போடும் அணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ஐபிஎல் சீசனின் லீக் போட்டிகள் முடிவை நெருங்கியுள்ள நிலையில் எந்த அணிகள் ப்ளே ஆப் செல்லும் என்பதில் பெரும் போராட்டமே நடந்து வருகிறது. ஒவ்வொரு அணிக்கும் 14 போட்டிகள் என்ற கணக்கில் 13 போட்டிகள் முடிந்து விட்ட நிலையில் இன்னமும் ப்ளே ஆப் செல்வதில் இழுபறி நீடித்து வருகிறது. குஜராத் டைட்டன்ஸ் மட்டுமே 18 புள்ளிகளுடன் ப்ளே ஆப்க்கு தகுதி பெற்றுள்ளது.

இதுதவிர சிஎஸ்கே, லக்னோ, மும்பை அணிகள் அடுத்த இடங்களில் இருந்த நிலையில் நேற்றைய ஆர்சிபியின் வெற்றி மும்பைக்கு ஆப்பு அடித்துள்ளது. நேற்று சன்ரைசர்ஸ் அணியை எதிர்கொண்ட ஆர்சிபி வெற்றி பெற்ற நிலையில் புள்ளிப்பட்டியலில் 14 புள்ளிகளை பெற்று நல்ல ரன்ரேட் இருந்ததால் 4வது இடத்தை அடைந்துள்ளது.

இதனால் மும்பை அணி 5வது இடத்திற்கு பின் தங்கியுள்ளது. இவர்களுக்கு அடுத்து ராஜஸ்தான் அணிக்கு ப்ளே ஆப் வாய்ப்பு உள்ளது. ஆனால் அதற்கு இன்றைய கடைசி லீக் போட்டியில் ராஜஸ்தான் அதிக ரன்ரேட்டில் வெல்ல வேண்டும், அதுமட்டுமல்லாமல் ஆர்சிபி, மும்பை அணிகள் தங்கள் கடைசி லீக் போட்டிகளில் தோற்க வேண்டும். அதனால் ராஜஸ்தானின் ப்ளே ஆப் கனவு இப்போதைக்கு சந்தேகம்தான்.

ஆனால் ப்ளே ஆப் செல்ல புள்ளி பட்டியலின் நான்காவது இடத்திற்கு ஆர்சிபி, மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையே மோதல் இருக்கும். அடுத்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றால் 16 புள்ளிகளுடன் 2வது இடத்தை பிடிக்கலாம். ஆர்சிபி வெற்றி பெற்றாலும் அதற்கு வாய்ப்புள்ளது. ஆனால் சிஎஸ்கே, லக்னோ அணிகள் தங்களது அடுத்த போட்டிகளில் வென்று விட்டால் 17 புள்ளிகளுடன் 2 மற்றும் 3வது இடத்தை அவை தக்க வைத்துக் கொள்ளும். அதனால் கடைசி இடத்திற்கு ஆர்சிபி, மும்பை அணிகள் மோதிக் கொள்ள வேண்டியிருக்கும். மும்பை அணி வென்றால் மும்பை – சிஎஸ்கே இடையேயான ப்ளே ஆப் போட்டி பரபரப்பான ஒன்றாக இருக்கும். ஆர்சிபி வென்றால் ஆர்சிபி – லக்னோ அணி ஆட்டத்தில் பரபரப்பை எதிர்பார்க்கலாம்.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே போட்டியில் இரு வீரர்கள் சதம்.. ஐபிஎல் வரலாற்றில் முதல் முறை..!