Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நானா இருந்தா ரோஹித் ஷர்மாவ டீம்ல எடுக்கவே மாட்டேன்… கமெண்ட்ரியில் கலாய்த்த சீக்கா!

Advertiesment
நானா இருந்தா ரோஹித் ஷர்மாவ டீம்ல எடுக்கவே மாட்டேன்… கமெண்ட்ரியில் கலாய்த்த சீக்கா!
, திங்கள், 8 மே 2023 (07:52 IST)
சமீபகாலமாக் ரோஹித் ஷர்மாவின் கேப்டன்சி மற்றும் பேட்டிங் சிறப்பானதாக இல்லை.  இந்நிலையில் நேற்று மும்பை அணிக்காக தன்னுடைய 200 ஆவது போட்டியை அவர் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த போட்டியில் டக் அவுட் ஆன, அடுத்த போட்டியிலும் சென்னை அணிக்கு எதிரான போட்டியிலும் சொல்லி வைத்தார் போல டக் அவுட் ஆனார். இதனால் அவரின் பேட்டிங் கடுமையாக விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.

இந்நிலையில் முன்னாள் இந்திய வீரரும், இப்போது தமிழ் வர்ணனையாளராக பணியாற்றி வருபவருமான ஸ்ரீகாந்த், “இனிமேல் ரோஹித் ஷர்மா ஹிட்மேன் என்றில்லாமல் தன் பேரை ‘நோ ஹிட் மேன்’ என மாற்றிக் கொள்ளலாம். நான் மும்பை அணியின் கேப்டனாக இருந்தால், அவரை ஆடும் லெவனில் கூட எடுக்க மாட்டேன்” எனக் கூறியுள்ளார்.

ஸ்ரீகாந்த் வழக்கமாக தனது துடுக்குத்தனமான உளறுவாய் கமெண்ட்களை வர்ணனையின் போது வெளிப்படுத்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்னும் அத மறக்கல போல… லக்னோவுக்கு எதிரான போட்டியில் குஜராத் அணிக்கு சப்போர்ட் செய்த கோலி