தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் லீக் போட்டியில் சிறப்பாக விளையாடிய குஜராத் அணியின் சுப்மன் கில் மீண்டும் சதத்தை தவறவிட்டுள்ளார்.
ஐபிஎல் சீசனின் லீக் போட்டிகளில் இரண்டாவது பாதி ரிவால்ரி போட்டிகள் பரபரப்பாக நடந்து வரும் நிலையில், இன்று பிற்பகல் போட்டியில் குஜராத் அணியும், லக்னோ அணியும் மோதி வருகின்றன. டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்த லக்னோ அணியின் வியூகங்களை உடைத்து அதிரடி செய்துள்ளது குஜராத் டைட்டன்ஸ்.
ஓப்பனிங் பேட்ஸ்மேனான வ்ரித்திமான் சாஹா 43 பந்துகளில் 10 பவுண்டரிகள் 4 சிக்ஸர்களை விளாசி 81 ரன்களை குவிக்க, அதேசமயம் பார்ட்னர்ஷிப்பில் இறங்கிய சுப்மன் கில் “நமக்கு பவுண்டரி ஆகாது.. சிக்ஸரை நான் பாத்துக்குறேன்” என 7 சிக்ஸர்களை விளாசி தள்ளினார். அவுட் ஆகாமல் 51 பந்துகளில் 94 ரன்களை குவித்த சுப்மன் கில் இன்னும் ஒரு 6 ரன் சேர்த்திருந்தால் இந்த சீசனில் ஒரு சதத்தை பதிவு செய்திருக்கலாம்.
ஆனால் அதற்கு ஓவர்கள் முடிவடைந்ததால் இந்த முறையும் அந்த சாதனையை நிகழ்த்த முடியாமல் போனது. முன்னதாக நடந்த போட்டியில் லக்னோ அணியை அதன் ஹோம் க்ரவுண்டிலேயே வைத்து வென்றது குஜராத். இந்நிலையில் இன்று குஜராத்தை அதன் ஹோம் க்ரவுண்டில் வைத்து 228 என்ற இமாலய சேஸிங்கை செய்து வீழ்த்துமா லக்னோ அணி என்ற எதிர்பார்ப்பு உள்ளது.