Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’ஒரு சூறாவளி கிளம்பியதே..!’ ரோஹித் சர்மாவுக்கு ஒலித்த பாடல்! – சிரிப்பு மயமான ஸ்டேடியம்!

Rohit sharma
, ஞாயிறு, 7 மே 2023 (07:06 IST)
நேற்று சென்னையில் நடந்த சிஎஸ்கே – மும்பை இந்தியன்ஸ் போட்டியின்போது ஒலிபரப்பான பாடலை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்.

நேற்று சென்னை சேப்பாக்கத்தில் நடந்த எல் க்ளாசிக்கோ என வர்ணிக்கப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் இடையேயான போட்டியில் சிஎஸ்கே 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பையை வென்றது.

தொடக்கத்தில் களம் இறங்கிய மும்பை அணி விக்கெட்டுகள் மளமளவென வீழ்ந்த நிலையில், சேஸிங் வந்த சென்னையை கட்டுப்படுத்த மும்பை கேப்டன் ரோஹித் சர்மா எவ்வளவோ முயன்றார். ஆனால் சென்னை அணியின் சிறப்பான பேட்டிங் மும்பை வியூகங்களை தவிடு பொடியாக்கியது.

இந்நிலையில் சேஸிங்கின்போது கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்ட் செட் பண்ணிக் கொண்டிருந்தார். அப்போது மைதானத்தில் ‘தமிழ் படத்தில்’ வரும் ஒரு சூறாவளி கிளம்பியதே பாடல் ஒலிக்கவும் மைதானம் முழுவதும் கலகல சிரிப்பொலி எழுந்தது. அதுமட்டுமல்லாமல் அதை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் ஷேர் செய்து ட்ரெண்ட் செய்துள்ளனர்.

ஏன் அந்த குறிப்பிட்ட பாடலையும் ரோகித் சர்மாவையும் ஒப்பிட்டு அவர்கள் சிரிக்கிறார்கள் என்பதற்கு பின்னால் சில காரணங்கள் உள்ளது. மும்பை கேப்டன் ரோஹித் சர்மாவும், தமிழ் படத்தில் நடித்த நடிகர் சிவாவும் ஒரே மாதிரியான தோற்றம் கொண்டவர்கள் என்பது கிரிக்கெட் ரசிகர்கள் பலரின் கருத்து. எனவே ரோஹித் சர்மாவை கிண்டல் செய்து பதிவிடும் மீம்களில் நடிகர் சிவாவின் மீம் டெம்ப்ளேட்டை பலர் பயன்படுத்துகின்றனர்.

இந்நிலையில்தான் நேற்று மைதானத்தில் ரோகித் சர்மாவுக்கு நேரடியாக சிவாவின் பாடலை ஒலிபரப்பியுள்ளார்கள். அதனால் இது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விக்கெட் எடுத்தா ஏன் சாமி கும்பிடுறீங்க..? – பதில் சொன்ன பதிரனா!