Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக் கோப்பையில் நியுசிலாந்து அணிக்கு வில்லியம்சன் ஆலோசகராக செயல்படுவார்… பயிற்சியாளர் அறிவிப்பு!

Webdunia
வியாழன், 27 ஏப்ரல் 2023 (07:57 IST)
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வந்த கேன் வில்லியம்சன் அந்த அணியால் கழட்டி விடப்பட்டார். இந்நிலையில் ஏலத்தில் அவர் கலந்துகொண்டார். ஏலத்தின் போது கேன் வில்லியம்சன் பெயர் வாசிக்கப்பட்ட நிலையில் அவருக்கு ஏலத்தொகை உயர்த்தப்படாததால் அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு குஜராத் அணி அவரை வாங்கியது. கடந்த ஆண்டில் அவரது ஏல மதிப்பு ரூ.14 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சென்னை அணிக்கு எதிரான முதல் போட்டியில் குஜராத் அணிக்காக விளையாடினார். இந்த போட்டியில் பீல்டிங் செய்தபோது, காயமடைந்தார். இந்நிலையில் இப்போது காயம் காரணமாக அவர் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து வில்லியம்சன் தற்போது சிகிச்சைக்குப் பிறகு நியுசிலாந்து நாட்டுக்கு திரும்பியுள்ளார். காயம் காரணமாக வில்லியம்சன் விரைவில் வர உள்ள 50 ஓவர் உலகக்கோப்பை தொடரிலும் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஒருவேளை அவர் விளையாடவில்லை என்றால் டாம் லாதம் அணியை வழிநடத்தலாம் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் வில்லியம்சன் உலகக்கோப்பையில் விளையாட முடியாத சூழல் உருவானால், அவர் அணிக்கு ஆலோசகராக செயல்படுவார் என்று நியுசிலாந்து அணியின் பயிற்சியாளர் கேரி ஸ்டெட் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நிதீஷ் ராணா அங்கதான் அடிப்பார்னு தெரிஞ்சும் கோட்டை விட்டுவிட்டோம்.. சி எஸ் கே கேப்டன் ருத்துராஜ் வருத்தம்!

ஓப்பனிங் சொதப்பிட்டு.. பேட்டிங் ஆர்டர் சரியா அமையல! - தோல்வி குறித்து CSK கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்!

தோனி, ஜடேஜா இருந்தும் வெற்றி இல்லை.. சிஎஸ்கே போராடி தோல்வி..

இப்பவும் கான்வே இல்ல.. டாஸ் வென்ற சிஎஸ்கே பவுலிங் தேர்வு! - ப்ளேயிங் 11 நிலவரம்!

18 ஓவர்ல உங்கள முடிச்சோம்.. 16 ஓவர்ல மேட்ச்சையே முடிச்சிட்டோம்! - அதிரடியாக வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments