நியூசிலாந்து நாட்டில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதை அடுத்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதால் அந்நாட்டு மக்கள் மத்தியில் பேரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் ஆங்காங்கே நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது என்பதும் நேற்று கூட இந்தோனேசிய நாட்டில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் அந்நாட்டில் உள்ள மக்கள் பதட்டம் அடைந்தனர் என்பதை பார்த்தோம்.
இந்த நிலையில் சற்றுமுன் நியூசிலாந்து நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவுக்கு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நியூசிலாந்து நாட்டில் உள்ள கெர்மாடெக் என்ற தீவுகளில் தான் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்கா சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் உள்ள மக்கள் பெரும் அச்சத்துடன் உள்ளனர்