துருக்கி நாட்டில் நடைபெற்றுவரும் வில்வித்தை போட்டியில் இந்திய வீராங்கனை சுரேகா வெண்ணாம் தங்கப்பதக்கம் வென்றார்.
துருக்கி நாட்டில் தற்போது உலகக் கோப்பை வில்வித்தைப் போட்டி நடைபெற்று வருகிறது. ஸ்டேஸ்ஜ் 1 சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது.
இதில், பெண்களுக்கான தனிநபர் இறுதிப் போட்டியில், இந்தியாவைச் சேர்ந்த ஜோதி சுரேகா வெண்ணாம் என்ற வீராங்கனை தரவரிசையில் 3 ஆம் இடத்தில் உள்ள கொலம்பியாவின் சாரோ லோபவை 149-146 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றார்.
அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. ஏற்கனவே ஜோதி சுரேகா அரையிறுதியில் பிரிட்டன் வீராங்கனையை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.