மொத்தமா முடிச்சு விட்டாங்க… கவுகாத்தி டெஸ்ட்டில் தோற்று வொயிட்வாஷ் ஆன இந்தியா!

vinoth
புதன், 26 நவம்பர் 2025 (12:40 IST)
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையே கௌகாத்தியில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், 549 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் இந்தியா, 22 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து நான்காம் நாள் ஆட்டத்தை முடித்தது.

இந்த போட்டியை இழந்தால் இந்திய அணி சொந்தமண்ணில் வொயிட்வாஷ் ஆன மோசமான சாதனையைப் படைக்கும். அதனால் ஐந்தாம் நாளில் எப்படியாவது டிரா செய்யவாவது போராடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து சொதப்பினர்.

இதனால் இந்திய அணி 140 ரன்கள் மட்டும் சேர்த்து படுதோல்வி அடைந்துள்ளது. இதன் மூலம் இந்திய அணி 408 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. தென்னாப்பிரிக்காவின் சைமன் ஹார்னர் ஆறு விக்கெட்களை வீழ்த்தினார்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2வது இன்னிங்ஸில் 140 ரன்களுக்கு ஆட்டமிழந்த இந்தியா.. தென்னாப்பிரிக்கா அபார வெற்றி..!

ஸ்மிருதி தந்தை டிஸ்சார்ஜ்.. ஆனால் திருமண மறுதேதி அறிவிப்பு இல்லை.. என்ன நடக்குது?

5 விக்கெட்டுகள் இழந்து தடுமாறும் இந்தியா! ஜடேஜா - சாய் சுதர்சன் டிரா செய்வார்களா?

2026 ஐசிசி டி20 உலகக் கோப்பை அட்டவணை வெளியீடு: ஒரே பிரிவில் இந்தியா, பாகிஸ்தான்..!

மண்வெட்டியை மண்வெட்டி என்று சொல்லுங்கள்… நிதிஷ்குமாரை சாடிய ஸ்ரீகாந்த்!

அடுத்த கட்டுரையில்
Show comments