Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

2வது இன்னிங்ஸில் 140 ரன்களுக்கு ஆட்டமிழந்த இந்தியா.. தென்னாப்பிரிக்கா அபார வெற்றி..!

Advertiesment
இந்தியா vs தென்னாப்பிரிக்கா

Mahendran

, புதன், 26 நவம்பர் 2025 (12:38 IST)
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா 140 ரன்கள் எடுத்த நிலையில், 48 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அபாரமாக வெற்றி பெற்றது.
 
தென்னாபிரிக்க அணி முதல் இன்னிங்சில் 489 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 260 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளர் செய்தது.
 
இந்த நிலையில், இந்தியா முதல் இன்னிங்சில் 201 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 549 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. ஆனால், ஆரம்பம் முதலே அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்து கொண்டே இருந்த நிலையில், இந்தியா 140 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
 
இதனை அடுத்து, தென் ஆப்பிரிக்கா 408 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.
 
இரண்டாவது இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா அணியின் சைமன் ஹார்மர் பந்துவீசி ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஸ்மிருதி தந்தை டிஸ்சார்ஜ்.. ஆனால் திருமண மறுதேதி அறிவிப்பு இல்லை.. என்ன நடக்குது?