Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒருநாள் கிரிக்கெட் தொடர்: ஆஸ்திரேலியாவை ஒயிட் வாஷ் செய்த இங்கிலாந்து

Webdunia
திங்கள், 25 ஜூன் 2018 (16:20 IST)
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் திரில் வெற்றி பெற்ற இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவை ஒயிட் வாஷ் செய்தது.
 
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை விளையாடி வருகிறது. இந்த தொடரில் முதல் 4 போட்டிகளிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
 
இந்நிலையில், இரு அணிகளும் மோதும் 5வது ஒருநாள் போட்டி நேற்று மான்செஸ்டரில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து 34.4 ஓவர்களில் 205 ரன்களுக்கு அனைத்து வீக்கெட்டுகளையும் இழந்தது. அதிகப்பட்சமாக டிராவிஸ் ஹெட் 56 ரன்களும், அலெக்ஸ் கேரி 44 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் மோயீன் அலி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
 
206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி துவக்க வீரர்கள் ஜேசன் ராய் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோர் வந்த வேகத்தில் நடையை கட்டினர். இதையடுத்து களமிறங்கிய ஜோ ரூட் 1 ரன்னிலும், இயான் மார்கன் டக்-அவுட்டும் ஆகினர். அதைத்தொடர்ந்து களமிறங்கிய ஜாஸ் பட்லர் தனது நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்தார். இதனால் அந்த அணி 48.3 ஓவர்களில்  வெற்றி இலக்கை எட்டியது. அதிகப்பட்சமாக ஜாஸ் பட்லர் 110 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் இங்கிலாந்து அணி 5-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி ஒயிட் வாஷ் செய்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர் சி பி அணிக்குக் கேப்டனாகிறாரா கோலி?... டிவில்லியர்ஸ் கொடுத்த அப்டேட்!

கொஞ்சம் மசாலா வேணும்ல… ஆஸ்திரேலிய பிரதமரிடம் ஜாலியாக பேசிய கோலி!

குணமாகாத காயம்..? இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் சுப்மன் கில் விலகல்?

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு 4 ஆண்டு தடை! என்ன காரணம்?

பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு ஊக்கத்தொகை… சமாதானப்படுத்த முயலும் ஐசிசி!

அடுத்த கட்டுரையில்
Show comments