Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிபா கால்பந்து: வாய்ப்புகளை தவறவிட்டும் துனிஷியாவை தோற்கடித்த இங்கிலாந்து

Advertiesment
பிபா கால்பந்து: வாய்ப்புகளை தவறவிட்டும் துனிஷியாவை தோற்கடித்த இங்கிலாந்து
, செவ்வாய், 19 ஜூன் 2018 (08:30 IST)
ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் துனிஷியாவுக்கு எதிரான போட்டியில் கோல் போடும் இரண்டு வாய்ப்புகளை இங்கிலாந்து வீரர்கள் தவறவிட்டபோதிலும் துனிஷியாவை 2-1 என்ற கோல்கணக்கில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
 
நேற்றைய ஆட்டம் விறுவிறுப்பாக இருந்த நிலையில் முதல் பாதியில் கோல் போட இரண்டு அருமையான வாய்ப்புகளை இங்கிலாந்து அணியினர் தவறவிட்டனர். இருப்பினும் ஆட்டத்தின் 11-வது நிமிடத்தில் இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேன் ஒரு கோல் அடித்து இங்கிலாந்து அணியை 1-0 என்ற முன்னிலை நிலைக்கு கொண்டு வந்தார்.
 
ஆனால் இதற்கு பதிலடியாக ஆட்டத்தின் 35வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னரை பயன்படுத்தி துனிசியா அணியின் பெர்சானி சஸ்சி ஒரு கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என சமனில் இருந்தது. 
 
webdunia
இரண்டாவது பாதியில் இரு அணிகளும் கோல் போடாததால் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. இதில்இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேன் மீண்டும் ஒரு கோல் அடித்து போட்டியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். இறுதியில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் துனிஷியாவை தோற்கடித்தது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலகக்கோப்பை கால்பந்து போட்டி: இன்றைய ஆட்டங்கள்