Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலந்து அணியை பொளந்து கட்டிய கொலம்பியா

Webdunia
திங்கள், 25 ஜூன் 2018 (09:30 IST)
ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் நேற்றைய மூன்று ஆட்டங்களில் ஒரு ஆட்டத்தில் இங்கிலாந்து அணி பனாமா அணியை 6-1 என்ற கோல் கணக்கில் வென்ற நிலையில் இன்னொரு ஆட்டத்தில் போலந்து அணியை கொலம்பியா அணி 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது
 
நேற்று போலந்து-கொலம்பிய அணிகளுக்கு எதிரான போட்டி தொடங்கியதில் இருந்து கொலம்பியா அணி வீரர்கள் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் ஆட்டத்தின் 40-வது நிமிடத்தில் கொலம்பியா அணியின் யெரி மினா ஒரு கோல் அடித்தார். இதனையடுத்து ஆட்டத்தின் முதல் பாதியின் முடிவில் கொலம்பியா அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.
 
இந்த நிலையில் ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் கொலம்பியா அணியின் ராடமல் பால்கோ 70-வது நிமிடத்தில் ஒரு கோல், ஜுவான் குவாட்ராடோ 75-வது நிமிடத்தில் ஒரு கோல் என அடித்ததால்  கொலம்பியா அணி 3-0 என முன்னிலை பெற்றது. கடைசி வரை போலந்து அணியால் ஒரு கோல் கூட போட முடியாததால் இறுதியில் கொலம்பிய அணி 3-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வெற்றி பெற்றது.
 
இதேபோல் நேற்று நடந்த இன்னொரு ஆட்டத்தில் ஜப்பான் மற்றும் செனகல் அணிகள் மோதியது. இந்த போட்டியில் இரு அணிகளும் தலா இரண்டு கோல்கள் போட்டதால் போட்டி டிராவில் முடிந்தது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த முறை கால்குலேட்டர் உதவி இல்லாமல் ஆர் சி பி ப்ளே ஆஃப் செல்லும்.. சேவாக் கணிப்பு!

என்னய்யா தோனிய இப்படி அசிங்கப் படுத்திட்டாய்ங்க… நக்கல்யா உனக்கு ரஜத் படிதார்!

தோனியிடம் அப்படி சொல்லும் தைரியம் யாருக்கும் இல்லை… முன்னாள் வீரர் குற்றச்சாட்டு!

பதீரனா வீசிய பவுன்சரை தலையில் வாங்கிய கோலி… அடுத்தடுத்த பந்துகளில் பறந்த பவுண்டரி!

சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடித்த தோனி… இது மட்டும்தான் ஒரே ஆறுதல்!

அடுத்த கட்டுரையில்
Show comments