Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விவாகரத்து பெற்ற பிரபல தம்பதியை சேர்த்து வைத்த கொரோனா....!

Advertiesment
Hrithik Roshan
, வியாழன், 26 மார்ச் 2020 (08:59 IST)
பாலிவுட் சினிமாவின் மிகசிறந்த நடிகர்களுள் ஒருவரான ஹிருத்திக் ரோஷன் தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் வித்யாசமான,  விசித்திரமான நடிப்பை வெளிப்படுத்தி இந்திய சினிமாவை உலகெங்கும் உள்ள ரசிகர்களை திரும்பி பார்க்க செய்திடுவார். இதனாலே அவருக்கு உலகம் முழுக்க ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றது.

இவர் கடந்த 2000-ம் ஆண்டில்  ஃபேஷன் டிசைனிங் துறையைச் சேர்ந்த சுசன்னே என்பவரை திருமணம் செய்துகொண்டார்.  இத்தம்பதிக்கு இரண்டு மகன்கள் உண்டு. இத்தற்கிடையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக 2014-ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதையடுத்து தனது குழந்தைகளுடன் வீட்டில் வசித்து வரும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ் படத்தில் தன்னுடன் நடித்த  நடிகை கங்கனா ரனாவத்துடன் தொடர்பில் இருந்து கிசு கிசுக்கப்பட்டு வந்தார்.  

இந்நிலையில் தற்போது சுமார் 6 ஆண்டுகள் கழித்து மீண்டும் தன் முதல் மனைவியுடன் சேர்ந்துள்ளார். ஆம், கொரோனா வைரஸ் காரணமாக தனது குழந்தைகள் தனிமையாக இருப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாத சுசன்னே ஹிருத்திக்கின் வீட்டுக்கு வந்த தனது  மகன்களுக்கு வசிக்க முடிவெடுத்துள்ளார். இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகுந்த மகிழிச்சியுடன் தெரிவித்து  சுசன்னேவுக்கு நன்றி தெரிவித்துள்ளார் ஹிருத்திக்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமைச்சர் விஜயபாஸ்கருக்கு பார்த்திபன் கொடுத்த வித்தியாசமான பரிசு