Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொரோனா வைரஸ் : 12 வாரங்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டுமா?

Advertiesment
கொரோனா வைரஸ் : 12 வாரங்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டுமா?
, புதன், 25 மார்ச் 2020 (14:34 IST)
உலகளவில் மில்லியன் கணக்கான மக்கள் தங்களுக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறதா என்ற சந்தேகத்தில் உள்ளனர். 
 
கொரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற வேண்டும். ஆனால் தற்போது நிலவும் நெருக்கடி சூழலில் 12 வாரங்கள் தங்களை தானே வீட்டில் தனிமைப் படுத்திக்கொண்டு தற்காத்து கொள்ளும் புதிய திட்டம் பலரால் முன்னெடுக்கப்படுகிறது. 
 
உயிரைக்காக்கும் இந்த புதிய திட்டத்தை ஷீல்டிங் என்று அழைக்கின்றனர். பிரிட்டனில் இந்த ஷீல்டிங் முறையை பலர் பின்பற்ற துவங்கியுள்ளனர்.
 
ஷீல்டிங் என்றால் என்ன ?
ஷீல்டிங் என்றால் நாள் முழுக்க வீட்டில் இருக்க வேண்டும். கடைகளுக்கோ, பொது இடங்களுக்கோ செல்ல கூடாது. ஆனால் உங்கள் வீட்டில் தோட்டம் இருந்தால் அங்கு நடைபயிற்சி மேற்கொள்ளலாம். ஆனால் வீட்டிற்குள் உங்களை தவிர யாரும் வர அனுமதிக்கக்கூடாது. உங்களை கவனித்துக்கொள்ள யாரையாவது அனுமதித்தால் அவர்களும் தங்கள் கைகளை கழுவிய பிறகே உள்ளே அனுமதிக்கப்பட வேண்டும்.
 
உங்கள் வீட்டில் உள்ளவர்களும் சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். அவர்களும் வீட்டை விட்டு வெளியே செல்ல கூடாது. தங்கள் அலுவலக பணிகளை வீட்டில் இருந்தபடியே மேற்கொள்ளலாம். அவர்களிடம் இருந்தும் நிங்கள் இரண்டு மீட்டர் தூரம் விலகி இருக்க வேண்டும். வீட்டில் உள்ள ஜன்னல்களை திறந்து வைத்துக்கொள்ளலாம்.
 
ஒருவர் பயன்படுத்திய துணியை வேறுயாரும் பயன்படுத்த கூடாது. முடிந்தால் தனித்தனி கழிப்பறைகள் மற்றும் படுக்கை அறைகளை பயன்படுத்தலாம். அல்லது கழிப்பறைகளை பயன்படுத்திய பின்னர் நிச்சயம் சுத்தம் செய்ய வேண்டும்.
 
சமையலறையில் இருந்து சமைத்து முடித்துவிட்டு, உணவை எடுத்து சென்று உங்கள் அறையில் அமர்ந்து உண்ணவும். உணவு சமைக்க தனித்தனி பாத்திரங்களை பயன்படுத்தவும். ஆனால் சோப், அல்லது தண்ணீர் ஊற்றி கழுவினால் வைரஸ் பரவாது என்பது குறிப்பிடத்தக்கது.
 
கொரோனா வைரஸ் பாதிப்பால் மக்கள் அனைவரும் பழகும் விதத்தையே மாற்றியுள்ளனர். ஒருவரிடம் இருந்து மற்றொவர் விலகி இருக்கின்றனர். நோய் தொற்று பரவாமல் இருக்க அனைத்து முயற்சிகளையும் உலகவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் அறிவுறுத்துகின்றனர். ஆனால் ஏற்கனவே உடலில் பிரச்சனை உள்ள நபர்கள் இந்த நேரத்தில் தங்களை தற்காத்து கொள்வது அவசியமாக கருதப்படுகிறது.
 
யாரெல்லாம் 12 வாரங்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் ?
குறிப்பிடப்பட்டுள்ள அறிகுறிகள் உள்ள அனைவரும் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அதாவது பாதுகாப்பான வழிமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம். 
 
ஆனால் ஷீல்டிங் முறையை பின்பற்ற வேண்டுமா? என்பதை உங்கள் மருத்துவரிடம் ஆலோசித்துக்கொள்ளலாம். ஷீல்டிங் என்பது நம்மை நாம் தற்காத்துக்கொள்வதற்கான முயற்சி மட்டுமே.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விட்டா ரஜினிய ஊட்டி விட சொல்லுவீங்க – கடுப்பான எஸ்.வி.சேகர்!