Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பொழியும் மழை; உருகும் பனி; உயரும் கடல் மட்டம்: ஆபத்தில் புவி

பொழியும் மழை; உருகும் பனி; உயரும் கடல் மட்டம்: ஆபத்தில் புவி
, வெள்ளி, 8 மார்ச் 2019 (21:03 IST)
கிரீன்லாந்தில் மழைப் பொழிவு அதிகரித்துள்ளதால், பனி உருகுவதும் அதிகமாகி உள்ளதாக ஒரு புதிய ஆய்வு கூறுகிறது. ஆர்க்டிக்கின் நீண்ட பனிகாலத்திலும், மழை பொழிவது ஆச்சரியமாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
 
கிரீன்லாந்தின் பனிக்கட்டிகள், பெரும் அளவிலான உறைந்த நீர் இருக்கும் இடமாகும். இது நெருக்கமான கண்காணிக்கப்பட்டு வருகிறது. அங்கிருக்கும் அனைத்து பனிக்கட்டிகளும் உருகினால், கடல்மட்டம் ஏழு மீட்டர் அளவிற்கு உயரும். 
 
மழை பொழிந்தால் என்ன ஆகும்?
குளிர்காலத்தில் மழைப் பொழிவு இருப்பது எங்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது என்கிறார் ஜெர்மனியில் உள்ள GEOMAR கடல் ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த மரிலெனா ஒல்ட்மான்ஸ். இவர்தான் இந்த ஆராய்ச்சியையும் வழிநடத்துகிறார்.
 
"இது ஏன் நடக்கிறது என்பது புரிகிறது. தெற்கில் இருந்து வரும் வெப்பக்காற்றுதான் இதற்கு காரணம். ஆனாலும், இது மழைப் பொழிவுடன் தொடர்புப் படுத்தப்பட்டிருப்பதை பார்க்க ஆச்சரியமாக இருந்தது," என்று அவர் கூறுகிறார்.
webdunia
இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் மற்றொரு பேராசிரியரான கொலம்பியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த மார்கோ டெடெஸ்கோ கூறுகையில், மழை அதிகரிப்பு இதில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
 
குளிர்காலத்தில் மழை பொழிந்தாலும், அது மீண்டும் உடனடியாக உறைந்து, அம்மழை மேற்பரப்பின் தன்மையை மென்மையாகவும் அடர்த்தியாகவும் மாற்றிவிடும். வெயில்காலத்தில் விரைவாக பனி உருகும் சூழலை முன்கூட்டியே இது ஏற்படுத்திவிடும்.
 
பனி எவ்வளவு அடர்த்தியாக இருக்கிறதோ, அவ்வளவு வெப்பத்தை அது உள்வாங்கிக் கொள்ளும். இது பனியை விரைவாக உருகச் செய்யும் என தெரிவித்துள்ளார். 

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மதிமுகவை கலைக்க வைகோ திட்டமா?