Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

'தடம்', '90ml, 'திருமணம்' ஓப்பனிங் எப்படி?

Advertiesment
'தடம்', '90ml, 'திருமணம்' ஓப்பனிங் எப்படி?
, சனி, 2 மார்ச் 2019 (07:46 IST)
நேற்று தடம், '90ml, திருமணம், தாதா 87 ஆகிய நான்கு திரைப்படங்கள் வெளியாகியது. இவற்றில் தடம், '90ml, ஆகிய படங்கள் நல்ல புரமோஷன் காரணமாக பெரும் எதிர்பார்ப்பும் ஏற்பட்டிருந்தது
 
இந்த நிலையில் அருண்விஜய்யின் தடம் படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்துள்ளது. இருப்பினும் சுமாரான ஒப்பனிங் வசூலையே பெற்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
 
அதேபோல் ஓவியாவின் '90ml படத்திற்கு நல்ல ஓப்பனிங் வசூல் கிடைத்துள்ளது. ஆனால் பெரும்பாலான ஊடகங்கள், சமூக வலைத்தளங்களில் நெகட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருப்பதால் இனி வரக்கூடிய வசூல் எப்படி உள்ளது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்
 
webdunia
அதேபோல் சேரனின் திருமணம் படத்திற்கு பெரும்பாலான பத்திரிகைகள் பாசிட்டிவ் விமர்சனங்கள் கொடுத்திருந்த போதிலும் இந்த படத்திற்கு மோசமான வசூலை கிடைத்துள்ளது.
 
மேலும் சாருஹாசனின் 'தாதா 87' படத்தை கிட்டத்தட்ட ஊடகங்கள் கண்டுகொள்ளவே இல்லை. இந்த படத்தின் ஓப்பனிங் வசூல் எப்படி இருக்கும் என்பதை சொல்லவே தேவையில்லை

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'எல்.கே.ஜி வெற்றிக்கு பின் ஹீரோயினியை ஓரங்கட்டிய ஆர்.ஜே.பாலாஜி!